மேலும் அறிய

Cinema News Today LIVE : ரன் பேபி ரன் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி!

Cinema News Today LIVE Updates, 17 February : சினிமா வட்டாரத்தில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் உடனுக்குடன் அப்டேட் இங்கே!

LIVE

Key Events
Cinema News Today LIVE : ரன் பேபி ரன் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி!

Background

வாத்தி விமர்சனம்

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா , சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாத்தி”.  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

கதையின் கரு 

1990 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.

இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை பொறுமையை சோதிக்கும் வகையில் சொல்கிறது “வாத்தி” திரைப்படம்.

நடிப்பு எப்படி? 

பாலமுருகனாக வரும் தனுஷ் படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார். ஆரம்பத்தில் கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் அட்டகாசங்களை படம் தோலுரித்து காட்டப்போகிறது என நினைப்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது. எந்த ஒரு காட்சியும் அதிக அழுத்தம் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டதுபோல இருக்கிறது.

குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பது, சாதிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஏற்கனவே பல படங்களில் காட்சிகள் வந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. வகுப்புகள் எடுக்காமல் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் , வியாபார நோக்கம் இல்லாத  தனியார் பள்ளி ஆசிரியர்கள் என இன்னும் எத்தனை காலத்துக்கு தான் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லப் போகிறார்கள். 

மீனாட்சியாக வரும் நாயகி சம்யுக்தா மேனனுக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை. ஆனாலும் வா வாத்தி பாடலில் ரசிக்க வைக்கிறார். அதேசமயம் படம் முழுக்க தெலுங்கு சினிமா மேக்கிங் ஸ்டைல் அப்படியே தெரிகிறது. அதனால் படம் பார்க்க செல்பவர்களால் கதையில் ஒன்ற முடியாமல் போகிறது. சமுத்திரகனியின் மிரட்டலான வில்லன் ஆக்டிங் இதில் மிஸ்ஸிங்.  

குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஊரில் உள்ள தியேட்டரை பயன்படுத்துவது, விதவிதமான கெட்டப் போட்டு பாடம் நடத்துவது , பாரதியார் வேடம் போட்டு தனுஷ் சண்டை போடுவது, தங்கள் பிள்ளைகளின் கல்வியை கெடுக்க நினைக்கும் ஊர் மக்கள் உடனே திருந்துவது என லாஜிக்கே இல்லாத காட்சிகள் உள்ளது. ஒரே ஒரு காட்சியில் இயக்குநர் பாரதிராஜா தலைகாட்டுகிறார். கென் கருணாஸ் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை.

இசை எப்படி?

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வா வாத்தி, நாடோடி மன்னன் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் படத்துடன் ஒன்றவில்லை. பின்னணி இசையில் சில இடங்களில் நன்றாக வந்துள்ளது. கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் சொதப்பி, இயக்குனர் வெங்கி அட்லூரி ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளார். 

படிப்பு தான் மரியாதையை சம்பாதிச்சு தரும், படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி கொடுங்க.. அதை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க , கல்வியில கிடைக்கிற காசு அரசியல்ல கிடைக்காது என ஆங்காங்கே வரும் வசனங்கள் கைதட்ட வைக்கிறது. 

 மொத்தத்தில் “வாத்தி” படம் ஒரு தெலுங்கு பேசும் தமிழ் திரைப்படம்...!

 


பகாசுரன் விமர்சனம் 

திரெளபதி, ருத்ர தாண்டவம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர், மோகன் ஜி. அவரது பட வரிசையில், தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம்தான் பகாசூரன். இப்படத்தில், பிரபல இயக்குனர் செல்வராகவன், ‘சதுரங்க வேட்டை’ புகழ் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். செல்வராகவன் மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பகாசூரன் படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த படம் எப்படிதான் இருக்கு? முழு விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

கதையின் கரு:

யூடியூபில் க்ரைம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் ரிட்டையர்டு ஆர்மி மேனாக வருகிறார் நட்ராஜன். இவரது சொந்த அண்ணன் மகள் ரம்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். வீட்டில் அனைவரும் திருமணத்திற்கு வற்புறுத்தியதால்தான் ரம்யா தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை கேஸை முடிக்கின்றனர். ஆனால், ரம்யாவின் மொபைல் போன் நடராஜனின் கைக்கு கிடைக்கின்றது. அதில், ரம்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும், திருமணம் செய்து கொண்டாலும் இந்த தொழிலில் இருந்து நீ தப்ப முடியாது என யாரோ இவரை மிரட்டுவதையும் தெரிந்து கொள்கிறார் நட்ராஜன். 

அந்த மிரட்டும் நபர் யார் என்று தேடுகையில், பல பெண்கள் பண கஷ்டத்தினால் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுவதையும், நட்ராஜன் அறிந்து கொள்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவோரையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் தேடித்தேடி கொள்கிறார், பீமராசு(செல்வராகவன்).இருவரது கதையும் வெவ்வேறு வகையில் பயணித்து ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைகின்றன. பிறகு என்ன நடந்தது? என்பதுதான் கதை. இதற்கிடையில் செல்வராகவனின் கலங்க வைக்கும் ஃப்ளேஷ் பேக், அனைவரும் அறிந்த அதே சமூக கருத்து என படம் பார்ப்பவர்களை கடுப்பேற்றும் அளவிற்கான கதையை எடுத்துள்ளார் மோகன்.ஜி. 

போர் அடிக்காத திரைக்கதை:

பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜியின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்டாக கூறப்படுவது, அவரது போர் அடிக்காத திரைக்கதைதான். அதையே இந்த படத்திலும் ஃபாலோ செய்துள்ளார். என்னதான் சில இடங்களில் அவரது கருத்துகளை ஏற்க முடியவில்லை என்றாலும், அவர் கதையை நேர்த்தியாக கொண்டு போன விதமும் பலரை வியக்கத்தான் வைக்கிறது. 

இருந்தாலும், முதல் பாதி படம் முடிவதற்கு முன்பாகவே பலர் ‘இன்னுமாடா இன்டர்வல் விடல’ என்று கேட்கும் சத்தம் காதில் விழத்தான் செய்கிறது. 

அசத்தல் பர்ஃபாமன்ஸ் கொடுத்த செல்வராகவன்!

பீஸ்ட் படத்தில் குட்டி ரோல் ஒன்றில் நடித்த செல்வராகவன், அடுத்து கீர்த்தி சுரேஷுடன் சாணிகாயிதம் என்ற படத்தில் வெறிப்பிடித்து கொலை செய்யும் மனிதராக நடித்திருந்தார். செல்வாவிற்கு அதே ரோல்தான் இந்த படத்திலும். 

முதல் காட்சியிலேயே ஒருவரை சரமாறியாக போட்டுத்தள்ளும் செல்வராகவன், அடுத்த சீனில் நெற்றி நிறைய பட்டையும் கழுத்தில் ருத்திராட்ச கொட்டயுமாக வருகிறார். ஆரம்பிக்கையில் அவரது நடிப்பு மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்து எழுந்து செல்கையில் மனம் முழுவதும் அவர்தான் இருக்கிறார். தனது மகளின் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை போட்டுத்தள்ளும் நேரத்தில் கொடூரமான பீமராசுவிற்கும், ஃப்ளாஷ்பேக்கில் அன்பான அப்பாவாக சாந்தமான பீமராசுவையும் நன்கு வித்தியாசப்படுத்தி பார்க்க முடிகிறது. 

மகளை இழந்து கலங்கும் காட்சியிலும், தன் மகளைப் போல யாரும் இறக்கக்கூடாது என அவர் பலரை துவம்சம் செய்யும் காட்சியிலும் ரசிகர்கள் அனைவரையும் ஆட்கொண்டு விடுகிறார், செல்வா. 

பிண்ணனி இசையில் மாஸ் காட்டியிருக்கிறார், சாம் சி.எஸ். ஆனால், பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமாக உள்ளதாக எதுவும் மனதில் ஒட்டாமல் நிற்கின்றன. 

‘என்னங்க கதை இது’

இந்த டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில் பழைய பெருசுகள் உளருவதைப் போல “எல்லாப் பிரச்சனையும் இந்த போனாலதான் வருது” என்று கூறும் கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளனர். பெண்கள், வீடியோ காலில் தங்களது காதலரிடம் அந்தரங்கமாக பேசுவதையும், காதலருடன் முத்தத்தை பரிமாறிக்கொள்வதையும் கூட, “தப்பு தப்பு தல மேல கொட்டு” என்பதைப் போல படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தனது காதலருக்கு முத்தம் கொடுத்ததை வீடியோ எடுத்த சிலர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக செல்வராகவனின் மகள் தனது தந்தையிடம் வந்து கூறுவார். அப்போது, “பெரிய தப்பு பன்னிட்டேன் பா..” என்று கூறி கதறுவார். அப்போது செல்வராகவன், “அழாதம்மா, கண்ணு ராஜாத்தி” என்று கூறிவாரே தவிர “நீ செய்ததில் ஒன்றும் தவறில்லை” என்று ஒரு வார்த்தைக் கூட கூறமாட்டார். 

மேற்கூறியதைப் போல, படத்தில் பல ஓட்டைகள் இருந்தன. அதையெல்லாம் பூசி மொழுகக் கூட இயக்குனர் முயற்சியை மேற்கொள்ளவில்லை. எல்லா காட்சியிலும், பெண்கள் நம்பி ஒருவனிடம் தங்களின் உடலைக் காட்டுவதையும், முத்தம் கொடுப்பதையும் குறை சொல்கிறார்களே அன்றி, அவர்கள் குறித்து வீடியோ வெளியிடும் நபர்களை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனால் வரும் பிரச்சனைகளை கூறிவிட்டு அதை கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசியிருந்தால் இயக்குனரைப் பாராட்டலாம். ஆனால், வெகுஜன மக்களின், “எல்லாமே மொபைல் போனாலதான்” என்ற கருதத்தையே இந்த படத்திலும் திணிக்க முயற்சித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. பெண்களை பாலியல் தொழிலில் எப்படி சிக்கவைக்கின்றனர் என்று கூறிய விதத்தை மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம். 

மொத்தத்தில் செல்வராகவனுக்காக வேண்டுமானால் பகாசூரனைப் பார்க்கலாம், மற்றபடி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும். 

 

 

17:40 PM (IST)  •  17 Feb 2023

RJ Balaji : ரன் பேபி ரன் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி!

சமீபத்தில், ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் ரன் பேபி ரன் எனும் த்ரில்லர் படம் வெளியானது. அப்படத்திற்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார்.




16:10 PM (IST)  •  17 Feb 2023

SK Aditi : சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர்!

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் அதிதி ஷங்கர், பர்த்டே பாய் சிவாவுடன் போட்டோ எடுத்துள்ளார்.

15:37 PM (IST)  •  17 Feb 2023

Sadha : பிறந்த நாள் காணும் ஜெயம் புகழ் சதாவிற்கு வாழ்த்துக்கள்!

ஜெயம் ரவியுடன், “போயா போ” என்ற வசனம் பேசி, அந்நியன் படத்தில் நந்தினியாக கலக்கிய சதா, இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

15:32 PM (IST)  •  17 Feb 2023

DD Neelakandan : 38 வது பிறந்தநாளை கொண்டாடும் டிடி!

பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி தனது 38 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

15:26 PM (IST)  •  17 Feb 2023

Vikram : வைரலாகும் விக்ரமின் தங்கலான் லுக்!

சியான் விக்ரம், தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது, தங்கலான் பட கெட்டப்பில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார் விக்ரம்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget