Cinema Headlines: தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி? வைரலாகும் விஜய் ஆண்டனியின் தாத்தா: சினிமா செய்திகள்!
Cinema Headlines: கோலிவுட் வட்டாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
”எல்லா மலையாளிகளுக்கும் இதயப்பூர்வ நன்றி” கேரள ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ!
நடிகர் விஜய் தற்போது கேரளாவுக்கு தி கோட் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், மலையாள கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் அளவுக்கு சரிநிகராக கேரளாவிலும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்குப் பிறகு தற்போது முதன்முறையாக கேரளா சென்றுள்ளார். மேலும் படிக்க
துல்கர் சல்மான் வரிசையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகும் ஜெயம் ரவி.. காரணம் இதுதான்!
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. கமல்ஹாசனுடன் இப்படத்தில் பெரும் நடிகர், நடிகையர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து திடீரென நடிகர் ஜெயம் ரவி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
தமிழின் முதல் நாவலை எழுதியது விஜய் ஆண்டனி குடும்ப நபரா? யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இசை தாண்டி நடிப்பு, தயாரிப்பு என சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலக்கி வரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் தான் தன் மகளின் இழப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் குடும்ப நபர் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ஆனால் பாதியாக குறைந்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?
தமிழ், தெலுங்கு என டாப் நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா, பாகுபலி திரைப்பத்துக்குப் பிறகு பெரிதாக திரைப்படங்களில் கமிட்டாகவில்லை. இறுதியாக அவர் நடித்த நிசப்தம், மிஸ் ஷெட்டி மிசஸ் பொலிஷெட்டி ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை. இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி முதன்முறையாக காத்தனார் - த வைல்டு சார்சரர் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் எண்ட்ரி தர உள்ளார். மேலும் படிக்க
விடுதலை படத்தால் வெற்றிமாறன் மேல் கோபம் கொண்ட பாரதிராஜா - என்ன காரணம்?
அறிமுக இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க டில்லிபாபு தயாரித்துள்ளார். ஏப்ரல் 4 ஆம் தேதி கள்வன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மேலும் படிக்க