Cinema Headlines: சிவகுமாருக்கு குவியும் ஆதரவு: பான் இந்திய சம்பவத்துக்கு ரெடியான ரஜினி: சினிமா செய்திகள் இன்று!
Cinema News Today: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்..
பான் இந்திய சம்பவத்துக்கு தயாரான சூப்பர் ஸ்டார்! பாலிவுட் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ரஜினிகாந்த்!
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சஜித் நடியட்வாலா தயாரிப்பில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ. ஞானவேல் இயக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் படிக்க
மலையாள நடிகருக்கு ஃபேன் கேர்ளாக மாறிய சமந்தா: ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
டோலிவுட், கோலிவுட் என வெற்றிகரமாகப் பயணித்து தன் 14 ஆண்டு கால திரை வாழ்வை சமீபத்தில் நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu) நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் சமந்தாவை நேற்று முதல் பலரும் வாழ்த்தி வருகின்றனர். தன் கரியரின் உச்த்தில் தற்போது பயணித்து வரும் சமந்தா, மறுபுறம் மயோசிட்டிஸ், விவாகரத்து என தன் தனிப்பட்ட வாழ்வில் கடந்த ஓராண்டாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இதுவரை மல்லுவுட் பக்கம் காலடி எடுத்து வைக்காத சமந்தா, தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களைப் பற்றி சிலாகித்து பதிவிட்டுள்ளது கவனமீர்த்துள்ளது. மேலும் படிக்க
நண்பரின் சால்வையை தூக்கி எறிந்தாரா சிவகுமார்? உண்மையில் நடந்தது என்ன?
நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட பொன்னாடையை நடிகர் சிவகுமார் தூக்கி எறிந்த சம்பவத்தின் பின்னணியில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார். கிட்டதட்ட இன்று அறிமுகமாகும் அனைத்து தலைமுறை நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 82 வயதிலும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் சிவகுமார் செயல்படுவது பலருக்கும் ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. மேலும் படிக்க
பாலிவுட்டில் பட்டையைக் கிளப்ப தயாராகும் யோகி பாபு; ஹிந்தி கதாநாயகன் ஆகிறாரா?
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துவரும் நடிகர்கள் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிக்கின்றது. இதில் ரசிகர்கள் மத்தியில் இவரு முக்கிய கதாப்பாத்திரத்துல நடிக்கறாரா? அப்படினா படம் கண்டிப்பா நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளவர் நடிகர் யோகிபாபு. மேலும் படிக்க
சாதியில்லா சமூகத்தை நாம் தான் உருவாக்க வேண்டும் - கயல் ஆனந்தி வேண்டுகோள்!
நான் நடித்துள்ள மங்கை படம் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும் என நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார். கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. அந்த படத்தின் பெயரே அவரது அடையாளமாக மாறிப்போனது. இதனிடையே கயல் ஆனந்தி தற்போது ‘மங்கை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் துஷி, ஷிவின், சாம்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ள மங்கை படம் மார்ச் 1 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க