Samantha: மலையாள நடிகருக்கு ஃபேன் கேர்ளாக மாறிய சமந்தா: ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
Actress Samantha: இதுவரை மல்லுவுட் பக்கம் காலடி எடுத்து வைக்காத சமந்தா, தற்போது மலையாள நடிகரைப் பற்றி சிலாகித்து பதிவிட்டுள்ளது கவனமீர்த்துள்ளது.
டோலிவுட், கோலிவுட் என வெற்றிகரமாகப் பயணித்து தன் 14 ஆண்டு கால திரை வாழ்வை சமீபத்தில் நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu) நிறைவு செய்துள்ளார்.
மலையாள சினிமாவில் எண்ட்ரியா?
இந்நிலையில் சமந்தாவை நேற்று முதல் பலரும் வாழ்த்தி வருகின்றனர். தன் கரியரின் உச்த்தில் தற்போது பயணித்து வரும் சமந்தா, மறுபுறம் மயோசிட்டிஸ், விவாகரத்து என தன் தனிப்பட்ட வாழ்வில் கடந்த ஓராண்டாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறார்.
எனினும் இவை எதுவும் தன் கரியரை பாதிக்காமல், வெப் சீரிஸ், பாலிவுட் என சமந்தா அடுத்தடுத்த கட்டத்துக்குப் பயணித்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இதுவரை மல்லுவுட் பக்கம் காலடி எடுத்து வைக்காத சமந்தா, தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களைப் பற்றி சிலாகித்து பதிவிட்டுள்ளது கவனமீர்த்துள்ளது.
இவங்க தான் ஃபேவரைட்
தன் அனுபவம், சூப்பர் ஸ்டார் இமேஜ் தாண்டி கடந்த சில திரைப்படங்களாக வெரைட்டி காண்பித்து நடித்து வரும் நடிகர் மம்மூட்டி தற்போது மலையாள சினிமா உலகம் தொடங்கி பாலிவுட் வரை பேசுபொருளாக மாறியுள்ளார். 72 வயதாகும் மம்மூட்டி பிரம்மயுகம், நண்பகல் நேரத்து மயக்கம், காதல் தி கோர் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இளம் நடிகர்களுக்கு சவாலாகத் திகழ்ந்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், மம்மூட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை தன் ஸ்டோரியில் சமந்தா பகிர்ந்துள்ளார்.
மேலும் “என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட் இவர் தான்” என்றும் மம்மூட்டியை சமந்தா குறிப்பிட்டுள்ளார். அதே போல் நடிகர் ஃபஹத் ஃபாசிலின் புகைப்படத்தைப் பகிர்ந்து என்னுடைய மற்றொரு ஃபேவரைட் எனப் பகிர்ந்துள்ளார் சமந்தா.
ஃபஹத் ஃபாசிலுடன் சமந்தா ஏற்கெனவே தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மலையாளத் திரை உலகைப் புகழ்ந்த சமந்தா
முன்னதாக சமந்தா ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி- ஜோதிகா இணைந்து நடித்த காதல் த கோர் திரைப்படத்தினை இந்த ஆண்டின் சிறந்த படம் என உச்சிமுகர்ந்திருந்தார். மேலும் “மம்மூட்டி சார் நீங்கள் தான் என் ஹீரோ, இந்த பர்ஃபாமன்ஸை என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது” எனப் புகழ்ந்திருந்தார்.
மேலும் மலையாள நடிகர்களுடன் நடிப்பது நடிப்பு பள்ளிக்குச் செல்வது போன்றது என்றும், ஃபஹத் இப்படி செய்வார் என எதிர்பார்த்தால் அவர் அதற்கு மாறாக வேறொன்று செய்து உங்களை அசத்துவார் எனவும் முன்னதாக சமந்தா தன் நேர்க்காணலில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், சமந்தா நேரடி மலையாள சினிமாவில் சீக்கிரம் எண்ட்ரி தர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.