Cinema Headlines: பாரதி பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. சீயான் விக்ரம் தந்த அப்டேட்.. சினிமா செய்திகள் இன்று
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அட்மிட் ஆன பாரதி பட நடிகர் சாயாஜி ஷிண்டே.. என்ன ஆச்சு?
தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. கோலிவுட் சினிமாவில் பாரதியார் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான பாரதி படத்தில் நடித்ததன் மூலம் சாயாஜி ஷிண்டே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.அதன் பின் படிக்காதவன், வெடி, அருந்ததி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் இறுதியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியான கில்லர் சூப் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்ன தளபதி பட்டத்தை நீக்கியது ஏன் தெரியுமா? நடிகர் பரத் கொடுத்த விளக்கம்..
பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கவனமீர்த்த நடிகர் பரத். காதல், செல்லமே, எம் மகன், பட்டியல் என பல வெற்றி திரைப்படங்களைக் கொடுத்த பரத் கடந்த சில ஆண்டுகளாக பெரிதான வெற்றியை சினிமாவில் தக்கவைக்க முடியாமல் வலம் வருகிறார். இவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒரு அழுத்தமான கம்பேக் படத்துக்காக காத்திருந்தபடி உள்ளனர். இந்நிலையில் சின்ன தளபதி எனும் தன் பட்டத்தை கைவிட்டது பற்றி நடிகர் பரத் தற்போது மனம் திறந்துள்ளார்.
ஓ போடு, தங்கலான் அப்டேட் வரும்.. ஜெமினி ரிலீஸ் நாளில் சீயான் விக்ரம் பகிர்ந்த சூப்பர் விஷயம்!
தமிழ் சினிமாவின் தன்னைத் தானே செதுக்கு கடின உழைப்பால் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் தங்கலான் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில் இன்று விக்ரம் நடித்து வெளியான சூப்பர்ஹிட் படமான ஜெமினி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு விக்ரம் சர்ப்ரைஸ் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
திடீர் மாரடைப்பு.. பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான அருள்மணி காலமானார்
பிரபல நடிகர் மற்றும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான அருள்மணி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். தமிழ் சினிமாவில் அழகி, தென்றல், தாண்டவக்கோனே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து கவனமீர்த்தவர் நடிகர் அருள்மணி. அதிமுகவில் முன்னதாக தன்னை இணைத்துக் கொண்ட அருள்மணி மறு புறம் சினிமாவிலும் தொடர்ந்து ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அதிமுகவிக்காக மக்களவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு அவர் காலமானார்.
ஓடிடி தளத்தில் வெளியானது “பிரேமலு” படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் பிரேமலு. இளம் நடிகர்களுடன் களமிறங்கிய இப்படக்குழு மலையாள ஆடியன்ஸ் தாண்டி, தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது. கிரிஷ் A.D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இன்று இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது