Cinema Headlines: சிவகார்த்திகேயன் வைத்த பிரியாணி விருந்து.. அபுதாபி இந்து கோயிலில் ரஜினி.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: இன்று சினிமா வட்டாரங்களில் நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
கம்பேக் தந்த ராமராஜனின் சாமானியன் வசூல் எப்படி? 2 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
நடிகர் ராமராஜன் சாமானியன் திரைப்படத்தின் மூலம் 12 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் கம்பேக் தந்துள்ள நிலையில், நல்ல கதையம்சத்தை இப்படம் கொண்டுள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், சாமானியன் படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆர். ராகேஷ் இயக்கியுள்ள இப்படம் முதல் நாள் ரூ.7 லட்சத்தையும் இரண்டாம் நாளான நேற்று 3 லட்சங்களையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாள்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 ஆண்டுகளில் கான் விழாவின் உயரிய விருதுக்குத் தேர்வான ஒரே இந்தியப் படம்.. 8 நிமிடம் கைதட்டல்கள்!
சர்வதேச கான் திரைப்பட விழா கடந்த மே 14ஆம் தேதி தொடங்கி இன்று மே 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவில் பாயல் கபாடியா இயக்கியுள்ள ஆவணப் படமான All We Imagine As Light என்கிற திரைப்படம் இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவின் உயரிய விருதான Palme d’Or விருதுக்கு தேர்வாகியுள்ளது கவனமீர்த்துள்ளது. தலைமைச் செயலகம் தொடரில் நடித்த கனி குஸ்ருதி இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தினை பார்வையிட்ட பார்வையாளர்கள் மொத்தம் 8 நிமிடங்கள் கைதட்டி படத்தினை கெளரவித்துள்ளார்கள்.
அமரன் பட ஷூட்டிங் ஓவர்.. பிரியாணி விருந்து வைத்துக் கொண்டாடிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 2010ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜின் பயோபிக்காக உருவாகி வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் ரஜினிகாந்த் பிரார்த்தனை.. புகைப்படங்கள் உள்ளே!
நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு நேற்று முன் தினம் கவுரவித்தது இந்நிலையில், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'BAPS Hindu Mandir' இந்து கோயிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்து வழிபட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க: PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!