Cinema Headlines: விஜய் சேதுபதியின் மகாராஜா பட விமர்சனம்.. கருடன் வெற்றி விழாவில் நெகிழ்ந்த சூரி: சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!
மகாராஜாவாக வந்த விஜய் சேதுபதி.. 50வது படத்தில் கலங்கடித்தாரா.. முழு விமர்சனம் இதோ!
விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சலூன் கடை வைத்திருப்பவரான மகாராஜா, ஒரு விபத்தில் தனது மனைவி இறந்துவிட தன் மகளை தனியாக வளர்த்து வருகிறார். இதனிடையே தம் வீட்டின் லட்சுமி எனும் முக்கியமான பொருள் காணாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க விஜய் சேதுபதி செல்கிறார். உண்மையில் அவருக்கு நேர்ந்தது என்ன என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் பாதி முழுக்க காமெடியான மூட் செட் செய்து நம்மை குழப்பத்தில் வைத்திருக்கும் இயக்குநர் இரண்டாம் இரண்டாம் பாதியில் கதையின் புதிர்களை எல்லாம் உடைத்து எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் எமோஷனலான ஒரு கதையுடன் நம்மை தொடர்புபடுத்த வைக்கிறார். சீரியஸான ஒரு சப்ஜெக்ட்டை கொஞ்சம் புதிய முறையில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
வெற்றிமாறன்கூட வேலை செஞ்சிட்டா, எங்க்வேணா போய் பிழைச்சிக்கலாம்.. கருடன் வெற்றி விழாவில் சூரி!
விடுதலை படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடித்துள்ள கருடன் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஆக்ஷனில் கலக்கிய இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 15 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து இந்நிலையில், கருடன் படத்தின் வெற்றி விழாவில் பேசிய சூரி, ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து, கடைசியில் அதை சரியாக டெலிவரி செய்வது தான் முக்கியம். அதே போல தான் ஒரு படத்தின் ஃபைனல் மிக்ஸ். விடுதலை படத்திலும் விஷ்ணு வேலை செய்தார். விடுதலை படத்தில் உங்களைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. வெற்றிமாறன் சார் படத்தில் ஒருவர் ஒருமுறை வேலை பார்த்துவிட்டார் என்றால், அவரை இந்த உலகத்தில் எந்த மூலையில் வேலை செய்ய சொன்னாலும் அவர் பிழைத்துக் கொள்வார். சூப்பர் என்று அவருக்கு சர்டிஃபிகேட் கொடுத்து அனுப்பிவிடலாம்” எனப் பேசியுள்ளார்.
நாலு பேரு ரிஜெக்ட் பண்ண கதை.. விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்
மகாராஜா திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் வரவேற்பைப் பெற்று வரும் நிலைடில், நடிகர் விஜய் சேதுபதி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பேசியவை வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பற்றிப் பேசியுள்ள விஜய் சேதுபதி, “நானும் ரவுடிதான்' படத்தின் பர்ஸ்ட் ஷூட் முடிந்ததும் விக்னேஷ் சிவனுக்கு நான் போன் பண்ணி “நீ எனக்கு நடிக்க சொல்லியே கொடுக்கல, நீ என்னை சரியா புரிஞ்சுக்கல” என சண்டை போட்டேன். எங்க இரண்டு பேருக்கும் இடையில் புரிதல் வர, ஒரு நாலு ஐந்து நாள் ஆச்சு. நானும் ரவுடி தான் படம் கூட நாலு ஹீரோ ரிஜெக்ட் பண்ண கதைதான். அந்த படத்துல நான் விக்கியோட திரைக்கதை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டேனான்னு கூட எனக்கு தெரியாது. ஆனா அது அந்த அளவுக்கு ஸ்க்ரீன்ல வந்ததுன்னா அதுக்கு முக்கியமான காரணம் விக்னேஷ் சிவன்” எனப் பேசியுள்ளார்.
மஞ்சும்மெல் பாய்ஸ் எஃபெக்ட்.. கமல் ரசிகர்களுக்கு விருந்தாக ரிலீசாகும் குணா திரைப்படம்!
சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான படம் குணா. ரோஷினி, ஜனகராஜ், எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைபடத்தில் குணா படத்தை ரெஃபரன்ஸாக பயன்படுத்தியிருந்த விதம் ரசிகர்களைக் கவர்ந்தது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கழித்து குணா படம் இன்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. குணா படத்துக்கு கடந்த சில மாதங்கள் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். வரும் ஜூன் 21ஆம் தேதி சென்னையில் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.