மேலும் அறிய

Cinema Headlines: இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் ரஜினி கருத்து: அரண்மனை 4 வசூல் நிலவரம்: சினிமா ரவுண்ட்-அப்!

Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. ரஜினி கொடுத்த “நச்” பதில்!

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் கூலி படத்தில், நடிகர் ரஜினிகாந்த் 1983ஆம் ஆண்டு நடித்த தங்க மகன் திரைப்படத்தில் இளையராஜா இசையில் அமைந்த டிஸ்கோ பாடல் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விவகாரம் கடந்த சில நாள்களாக பேசுபொருளாகி வரும் நிலையில், காப்புரிமை விவகாரம் என்பது இசை அமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள பிரச்னை என ரஜினிகாந்த் தற்போது தெரிவித்துள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.. அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அரண்மனை பாகம் 4 நேற்று வெளியானது. முந்தைய பாகங்களைப் போல் இல்லாமல், அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாளில் மட்டும் இப்படம் ரூ.3.60 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் தெரிவித்துள்ளது.

மக்கள் மக்கள் பேச தொடங்கிவிட்டனர்.. கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து!

இளையராஜா - வைரமுத்து இடையே ஏற்கெனவே இருந்த பல ஆண்டுகால பிரச்னை தற்போது, இளையராஜா தன் பாடல்களுக்கு முழு காப்புரிமை கோரும் விவகாரத்தில் கொளுந்து விட்டெறியத் தொடங்கி உள்ளது. முன்னதாக இளையராஜாவின் பெயர் குறிப்பிடாமல், இசை பெரிதா, வரிகள் பெரிதா என வைரமுத்து அவரைத் தாக்கிப் பேச, அதற்கு இளையராஜாவின் இளைய சகோதரரான கங்கை அமரன் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் கங்கை அமரனுக்கு தற்போது வைரமுத்து பதிலடி தந்துள்ளார். “மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

“அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே” - நடிகை திரிஷா பிறந்தநாள் இன்று!

திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலோச்சி வரும் எவர்க்ரீன் பியூட்டியான நடிகை த்ரிஷா இன்று தன் 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒரு மாடலாக தன் பயணத்தைத் தொடங்கி, மிஸ் சென்னை, துணை நடிகை, நடிகை, முன்னணி நடிகை என கடந்த 22 ஆண்டுகளாக வெற்றிகரமாகப் பயணித்து வரும் த்ரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் என்றுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரூ.3500 சம்பளம், நடிப்பு தான் மூச்சு.. ஸ்டார் பட இயக்குநரின் அப்பா “ராஜா ராணி பாண்டியன்” உருக்கம்!

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் படம் வரும் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கெனவே பாராட்டுகளைப் பெற்று கவனமீர்த்துள்ளது. இந்நிலையில் இளனின் அப்பாவும், குணச்சித்திர நடிகருமான ராஜா ராணி பாண்டியன் இளன் குறித்தும், தன் திரைப்பயணம் பற்றியும் ஸ்டார் பட பத்திரிகையாளர் சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget