Meena: வீட்டுக்கு வந்த மீனா கணவரின் உடல் ... ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!
ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திரை பிரபலங்கல் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
நைனிகாவை 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு உயிரிழந்தார். . 48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
Extremely sad and shocked by the demise of Vidyasagar gaaru! My heartfelt condolences to Meena gaaru and the entire family! Wishing them with all the strength to sail through this! 🙏🏼
— Venkatesh Daggubati (@VenkyMama) June 29, 2022
Waking up to a terrible news.Heartbroken to learn actor Meena's husband, Sagar, is no more with us. He was battling lung ailment for long. Heart goes out to Meena n her young daughter. Life is cruel. At loss of words to express grief. Deepest condolences to the family. #RIP 🙏😭
— KhushbuSundar (@khushsundar) June 29, 2022
Woke up to devastating news of #meena garu’s husband, Vidyasagar garu passed away due to Covid complications. My deepest and heartfelt condolences to the entire family.
— Lakshmi Manchu (@LakshmiManchu) June 29, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்