Chennai Powercut : சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் "பவர்கட்" ? முழு விபரம் உள்ளே..! இதை செக் பண்ணுங்க..
மின் பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தி. நகர், அம்பத்தூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
![Chennai Powercut : சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் chennai today powercut on 27th july 2022 tngar ambattur areas power shutdown Chennai Powercut : சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/27/870f45d3815988191d0511cd16454de91658891614_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூலை 27 ஆம் தேதி சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
அதன்படி, இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தி. நகர், அம்பத்தூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகராயநகர்:
மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு ஒரு பகுதியில் மட்டும்.
மயிலாப்பூர் :
கல்லுக்காரன் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு, லஸ் நாட்டு வீராட்சி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தாம்பரம் :
அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, கடப்பேரி நியூ காலனி, நேரு நகர், மகாதேவன் தெரு, நல்லப்பா தெரு மெப்ஸ் ஜோனில் உள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
பெரம்பூர் :
சாய் நகர், தென்பழனி நகர், டீச்சர்ஸ் காலனி, கொளத்தூர் பூம்புகார் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
அம்பத்தூர் :
லேக்வியூ கார்டன், காவியா நகர், சீனிவாசபுரம், அன்னை நகர், டி.வி.எஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளை விரைந்து முடிக்குமாறும், சிரமத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)