மேலும் அறிய

Actor Hari Vairavan: ‘மன்னிச்சிரு வைரவா’.. வைரவன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்.. சோகத்தில் கோலிவுட்!

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் வைரவன் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் வைரவன் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகன் விஷ்ணுவின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் ஹரிவைரவன். அதனைத்தொடர்ந்து, கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ஆனால், அதன் பின்னர் அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் கை கூட வில்லை. இதனால் வறுமையின் பிடியில் தள்ளப்பட்ட அவர், பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டார். 

இதயநோயுடன், இரண்டு சிறுநீரகங்களும் அவருக்கு செயலிழந்தன. அதன்காரணமாக அவரின் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் அவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீடியோ வெளியிட்டு உதவிக்கேட்ட அவர், “ தனக்கு 11 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. இதனால் உடலின் பல பாகங்கள் வீக்கமடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக மேற்கொண்ட சிகிச்சைக்காகவே மொத்த நகைகளும், பணமும் காலியாகிவிட்டது என பேசினார். 

மேலும் தன்னைபபார்க்க தனது மனைவி மிகவும் சிரமப்படுகிறார். மருத்துவர்கள் எனக்கு 6 மாதம் எனக்கு கெடு விதித்து விட்டார்கள். நான் இறந்த பிறகு, எனது மனைவியையும் குழந்தைகளையும் யார் பார்த்துக்கொள்வார்கள் என்று வேதனையுடன் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், விஷ்ணு விஷால், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டினர்.

அதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலன்றி இன்று அதிகாலை 12.15 அளவில் மரணமடைந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற இருக்கிறது.

நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தாருக்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி என பதிவிட்டுள்ளார். 

இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட வீடியோவில் எங்களுடைய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த வைரவனின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். 

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், மன்னிக்கவும் வைரவன்.உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் வெண்ணிலா கபடிகுழுவின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார். 

இதேபோல் நடிகர் ரவி வெங்கட்ராமன் வெளியிட்ட பதிவில், வைரவனுடன் குள்ளநரி கூட்டம் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரது மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget