Bro Twitter Review: எமோஷனல் க்ளைமேக்ஸ்... ஆதிபுருஷ் படத்துக்கு சவால் விடும் கிராஃபிக்ஸ்... ‘ப்ரோ’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
Bro Movie Twitter Review in Tamil: சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள ‘ப்ரோ’ திரைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்!
Bro Movie Twitter Review in Tamil: தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வினோதய சித்தம்'. இந்த திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ப்ரோ என்ற பெயரில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ‘ப்ரோ’ படத்தைப் பற்றி ட்விட்டரில் நெட்டிசன்ஸ் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
முதல் 20 நிமிடம் போர்
படத்தின் முதல் இருபது நிமிடம் கொஞ்சம் போர் அடிப்பதாகவும் இருபது நிமிடங்களுக்குப் பிறகே பவன் கல்யாண் திரையில் தோன்றுவதாகவும் ஒருவர் கூறியிருக்கிறார்.
#Bro Movie Review -
— Varun Velamakanti (@VarunSunRisers) July 28, 2023
From the start to the end, audience won’t get bored. Tej does so well for his part and Pawan Kalyan’s screen presence and power in the film is just magnificent. Each and every family should watch this film. A refreshing tale that everyone should know 🧡
அனைவரும் பார்க்க வேண்டிய படம்
#Bro Review:
— Akhilesh Rajana (@AkhileshRr) July 28, 2023
Perfect blend of Entertainment,Message,Elevation! @PawanKalyan& @IamSaiDharamTej bonding was strong enough to convince fans and general audience,So its a hit!
Rating:3.25/5@thondankani @vishwaprasadtg@vivekkuchibotla @MusicThaman@TheKetikaSharma @neeta_lulla pic.twitter.com/YERWUYyfVm
ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக ப்ரோ படம் இருப்பதாகவும் பவன் கல்யாணின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாகவும். கடைசி 30 நிமிடங்கள் உணர்ச்சிகரமாக இருப்பதாக ஒருவர் கூறியிருக்கிறார்
ஆதிபுருஷ் படத்திற்கு சவால் விடும் வி.எஃப்.எக்ஸ்
My view 👀:
— Durgesh Kathera (@KatheraDurgesh) July 28, 2023
Bro is a fan feast and kind of all mix of jukebox of pawan kalayan songs and mass movements
But the last 30mins of the movie finds it soul and makes good watch
The BGM is 💥
Pawan Kalyan was on point and saviour
bad production values and amateur VFX #BroTheAvatar pic.twitter.com/68PryoBFvL
ப்ரோ திரைப்படம் நல்ல ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இருப்பதாகவும் படத்தின் ஒரு மிகப்பெரிய குறை என்றால் மிக மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டுமே என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்