Bro Trailer: பவர் ஸ்டார் பவன் கல்யாணை இயக்கிய சமுத்திரக்கனி.... டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த Bro ட்ரெய்லர்!
சமீபத்தில் தெலுங்கில் சமுத்திரக்கனி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தான் தமிழில் இயக்கி நடித்த இப்படத்தை, நடிகர் பவன் கல்யாணை வைத்து டோலிவுட்டில் இயக்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் ‘பவர் ஸ்டார்’ எனக் கொண்டாடப்படும் நடிகர் பவன் கல்யாணை வைத்து சமுத்திரக்கனி இயக்கியுள்ள ‘ப்ரோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
ப்ரோ திரைப்படம்
தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கி நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’வினோதய சித்தம்’. சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, சஞ்சிதா ஷெட்டி, தீபக் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படம் ஓடிடி தளத்தில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
பவர் ஸ்டார் பவன் கல்யாண்
விபத்தில் உயிரிழக்கும் நபருக்கு கடவுள் ஒரு வாய்ப்பு தரும்படியும், அதன் பிறகு தன் குடும்ப சுமைகளை இறக்கி வைத்துவிட்டு அந்நபர் 90 நாட்களுக்குள் திரும்பி வரும்படியும் இதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சமுத்திரக்கனி, தான் தமிழில் இயக்கி நடித்த இப்படத்தை, நடிகர் பவன் கல்யாணை கடவுளாகக் கொண்டு டோலிவுட்டில் இயக்கியுள்ளார்.
வெளியான ட்ரெய்லர்
நடிகர் சாய்தரம் தேஜ் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். இப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது. தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இப்படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார்.
Here is the POWERful Poster Without Water Mark #BroTheAvatar#BroTrailer is out now ▶️ https://t.co/anuc1fe2UG
— People Media Factory (@peoplemediafcy) July 22, 2023
Worldwide Grand Release in Theatres on JULY 28th! ⏳@PawanKalyan @IamSaiDharamTej@TheKetikaSharma @thondankani @MusicThaman @vishwaprasadtg @vivekkuchibotla… pic.twitter.com/CG4JoE9rLd
டோலிவுட்டில் கலக்கும் சமுத்திரக்கனி
இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பவன் கல்யாண் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கோலிவுட்டில் இருந்து டோலிவுட் பயணித்து தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்து வரும் சமுத்திரக்கனி, முன்னதாக தெலுங்கு வாத்தி படமான ‘சார்’, தசரா, விமானம் ஆகிய படங்களின் மூலம் கவனமீர்த்துள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக சமுத்திரக்கனி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.