மேலும் அறிய

Thala 62 | அஜித் 62 இயக்குநர் யார் தெரியுமா? தீபாவளிக்கு வந்திருக்கும் சரவெடி அப்டேட்..

வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் 61 வது படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்க உள்ளார். படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அஜித். தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது. படத்தின் டீசரை அடுத்தகட்டமாக வெளியிடுவதற்கான வேலைகளை படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அஜித் பைக் ட்ரிப் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலானது. அஜித் என்னதான் நடிகராக இருந்தாலும் அவர் நடிப்பதில் மட்டும் ஈடுபாடு கொண்டவராக இல்லை. நடிப்பை ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கும் அஜித், தனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை செய்யவே விரும்புவார். அதுமட்டுமல்லாமல் தன்னை ஒரு பிரபலமாக காட்டிக்கொள்ளாமல், தனது ரசிகருள் ஒருவராக இருந்தால் போதும் என்ற எளிமையை விரும்புவார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சரி இதெல்லாம் ஓக்கே!  விஷயத்துக்கு வாங்கன்னு கேட்குறீங்களா!.அஜித் தன்னுடைய 61 வது படத்தை இயக்குநர் வினோத்திற்கே கொடுத்திருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. அதனை ஹச்.வினோத்தும் உறுதிப்படுத்தினார். படத்தை வலிமை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கவுள்ளார். எனக்கு வினோத்துடன் வேலை செய்வது வசதியாக இருக்கிறது என அஜித் கூறியதாகவும் செய்திகள் வெளியானதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த ஒரு  வருடமாகவே  அஜித் சில இயக்குநர்களை நேரில் சந்தித்து கதை கேட்டு  வருகிறாராம்.அதுல ஒன்னை ஓக்கே பண்ணிட்டாராம் . அப்போ 61 வது படத்தை வினோத் இயக்கலையா என நீங்க ஷாக் ஆகுறது எங்களுக்கு புரியுது..ஆனா இது தலயோட  62 வது படத்துக்காம்.. இப்போ சுட சுட வெளியாகியிருக்கிற அப்டேட் என்னவென்றால் ,அஜித் தன்னிடம் கதை சொல்லிய தியாகராஜன் குமாரராஜாவிடம் மீண்டும் கதை விரிவாக்கத்தை  மீண்டும் கேட்டிருக்கிறாராம்.அவரின் கதை அஜித்திற்கு பிடித்து போகவே பச்சை கொடி அசைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Thala 62 | அஜித் 62 இயக்குநர் யார் தெரியுமா? தீபாவளிக்கு வந்திருக்கும் சரவெடி அப்டேட்..
அஜித்தின் 62 வது படத்திற்கு தியாகராஜன் குமாரராஜாவோடு கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா முன்னதாக ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சூப்பர் டியூலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார்.தியாகராஜன் குமாரராஜாவுக்கு அஜித்துடன் இணைந்து வேலை செய்வது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் , திரைக்கதைக்கு உதவியாக இருந்துள்ளார். அஜித்தின் 62 வது படத்தின் அப்டேட்டே அவரது ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்தான் . அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget