Valimai: ரெடியாகுங்க.. ஓடும் வேனில் மாஸ் காட்டும் அஜித்... வெளியான புது ‘வலிமை’ வீடியோ...!
வலிமை திரைப்படத்தின் சண்டை காட்சிகள் தொடர்பாக போனி கபூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2: 58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது. வெளிநாடுகளில் படம் சென்சார் ஆக சென்சார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வலிமை திரைப்படத்தின் சண்டைகள் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒரு வண்டியில் இருந்து அஜித் துப்பாக்கியுடன் சுடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
NEXT THURSDAY is #ValimaiDay. in Cinemas all across the world. #ValimaiFromFeb24#Valimai #ValimaiFDFS#AjithKumar @BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir pic.twitter.com/NKJjCwMIsL
— Boney Kapoor (@BoneyKapoor) February 17, 2022
முன்னதாக படம் ரிலீசுக்கான தேதி நெருங்கிவிட்ட நிலையில் ப்ரோமோக்களை அள்ளித்தூவி வருகிறது தயாரிப்பு நிறுவனம். முக்கியமாக நேற்று வெளியான 'நாங்க வேற மாறி' பாடல் க்ளிப் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்பாடலில் அதிகம் வைரலான தகதகனு மின்னலாம் வரிக்கான அஜித்தின் டான்சே ப்ரோமோவாக வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
தக தகனு மின்னலாம்! 🔥😎#ValimaiFDFS 🔜💥
— Sony Music South (@SonyMusicSouth) February 16, 2022
➡️ https://t.co/Sz4mRfglii#AjithKumar #HVinoth @BoneyKapoor @BayViewProjOffl @ZeeStudios_ @thisisysr @VigneshShivN @anuragkulkarni_#Valimai pic.twitter.com/nGeJeMStmt
அதேபோல் யுவனின் மாஸ் இசையுடன் அதிரடி காட்சிகளுடன் ஒரு ப்ரோமோவும் வெளியானது. ஹீமா குரோஷியின் மாஸ் காட்சிகள், அஜித்தின் அதிரடி காட்சிகள் என அந்த ப்ரோமோவும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் இன்று என்னமாதிரியான ப்ரோமோ வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நேர்கொண்ட பார்வையில் இணைந்த அஜித், வினோத் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல மாற்றங்களை சந்தித்தது. அப்படி இப்படியாக படம் ஒரு வழியாக பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் அந்தத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்தத் தேதியில் அடுத்த வாரம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:அள்ள அள்ள வலிமை ப்ரோமோ? வைரலாகும் வலிமை ப்ரோமோக்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!