Esmayeel Shroff dies : பாலிவுட்டின் பழம்பெரும் இயக்குநர் எஸ்மாயீல் ஷ்ராஃப் காலமானார் ! அவருக்கு வயது 62 !
பாலிவுட்டின் பிரபல நடிகர் கோவிந்தாவை அறிமுகப்படுத்தியது எஸ்மாயீல் ஷ்ராஃப்தான். கோவிந்தாவின் முதல் படமான லவ் 86 ஐ எஸ்மாயீல்தான் இயக்கியிருந்தார்.
பாலிவுட்டின் பழம்பெறும் இயக்குநர் எஸ்மாயீல் ஷ்ராஃப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் . அவருக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாலிவுட்டில் அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா போன்ற பல படங்களை இயக்கியவர் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் எஸ்மாயீல் ஷ்ராஃப் . கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்மாயீல் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.மறைந்த இயக்குநருக்கு நடிகர்கள் கோவிந்தா, பத்மினி கோலாபுரே மற்றும் அசோக் பண்டிட் உள்ளிட்ட பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இஸ்மாயில் அஹிஸ்தா அஹிஸ்தா, ஜித், அகர், காட் அண்ட் கன், போலீஸ் பப்ளிக், மஜ்தார், தில் அகிர் தில் ஹை, புலுண்டி, நிச்சாய், சூர்யா மற்றும் ஜுதா சச் போன்ற பாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் கடைசியாக 2004 இல் வெளியான தோடா தும் பட்லோ, தோடா ஹம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சில படங்களில் நடிகராகவும் தனது பங்களிப்பை கொடுத்திருந்தார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் கோவிந்தாவை அறிமுகப்படுத்தியது எஸ்மாயீல் ஷ்ராஃப்தான். கோவிந்தாவின் முதல் படமான லவ் 86 ஐ எஸ்மாயீல்தான் இயக்கியிருந்தார். எஸ்மாயீலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய நடிகர் கோவிந்தா “நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். என்னுடைய கேரியர் அவருடைய படத்திலிருந்து தொடங்கியது. கடவுள் அவருடைய ஆன்மாவை சொர்க்கத்தில் வைக்கட்டும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவர் எனக்கு வேலை கொடுத்தது மட்டுமல்ல, என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். கோவிந்தாவுக்கு சினிமா புரியும் என்று என் வாழ்வில் முதலில் சொன்னவர் அவர்தான். கோவிந்தில் இருந்து என்னை கோவிந்தா ஆக்கியதில் அவருக்குப் பெரிய பங்கு உண்டு” என அவரை நினைவுக்கூர்ந்தார்.
அதே போல நடிகை பத்மினி கோலாபுரே ”நான் அவருடன் தோடிசி பெவாஃபை மற்றும் அஹிஸ்தா அஹிஸ்தா உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.வர் தனது நடத்தையில் கண்டிப்பானவராகத் தெரிந்தார், ஆனால் அவர் சிரித்த முகத்துடன் இருந்தார். அவர் எதைப் பற்றி மிகவும் உறுதியாக இருப்பார் . எப்போது சிரித்த முகத்துடன் இருக்கும் சென்ஸிட்டிவான இயக்குநர். இது மிகப்பெரிய இழப்பு “ என்றார்.
திரைப்பட இயக்குநர் அசோக் பண்டிட்டும் எஸ்மாயீல் ஷெராஃப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் “பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்மாயீல் ஷ்ராஃப் ஜியின் மறைவு குறித்து அறிந்து வருத்தமடைகிறேன்... அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இது திரையுலகிற்கு மற்றொரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் “ என தெரிவித்துள்ளார்.