”தனுஷ், நீங்க நடிகர்னு நெனச்சேன்.. இப்போதான் தெரியுது யாருன்னு” - பாலிவுட் இயக்குநர் ட்வீட்..

தனுஷ் நீங்கள் ஒரு நடிகன் என்று நினைத்தேன், இன்றுதான் தெரியும் நீங்கள் ஒரு மந்திரவாதி என்று.. நடிகர் தனுஷை வைத்து அம்பிகாபதி இயக்கிய இயக்குநர் ஆனந்த் ராய் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை தனது ட்விட்டர்  பக்கத்தில் பாராட்டி உள்ளார் .

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. இந்த படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று படம் அமேசான் பிரைமில் வெளியானது . தமிழ் மட்டும் அல்லாமல் பல மொழிகளில் உள்ள ரசிகர்களும் படத்தை பார்த்து தங்களின் கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆனந்த் எல் ராய் 2013-ஆம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து " ராஞ்சனா" ஹிந்தியில் எடுத்தார் . தமிழில் அம்பிகாபதி என்று வெளியானது. பாலிவுடில் தனுஷ் நுழைவதற்கு இந்த படமே அடித்தளமாக இருந்தது .”தனுஷ், நீங்க நடிகர்னு நெனச்சேன்.. இப்போதான் தெரியுது யாருன்னு” - பாலிவுட் இயக்குநர் ட்வீட்..

இந்தப் படம் மிக பெரிய ஹிட் ஆனது மற்றும் நடிகர் தனுஷ் இந்தப் படத்திற்காக பல விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சோனம் கபூர் மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோரும் நடித்தனர். இப்போது, ஆனந்த் மற்றும் தனுஷ் மீண்டும் "அட்ரங்கி ரே" என்ற ஒரு இந்தி படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர், இதில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கின்றனர். ”தனுஷ், நீங்க நடிகர்னு நெனச்சேன்.. இப்போதான் தெரியுது யாருன்னு” - பாலிவுட் இயக்குநர் ட்வீட்..

இன்று கர்ணன் படம் பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜை தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு அனுபவம் இப்படித்தான் இருக்கவேண்டும். மாரி செல்வராஜ் செல்லுலாய்டு எண்ணங்களை வரைந்த விதம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது . என் வணக்கங்கள் உங்களுக்கு .. . என்று " பாராட்டி உள்ளார் ஆனந்த் எல் ராய்.

மாரி செல்வராஜும் தனது நன்றிகளை இயக்குனருக்கு தெரிவித்துள்ளார் .

பல பாராட்டுகளை கடந்து அமேசாம் ப்ரைமில் புறப்பட்டிருக்கிறது கர்ணன். திரை அரங்குகளில் பாராட்டுகளை அள்ளிச்சென்று தற்பொழுது ஓடிடி தளத்திலும் பெரும் இடத்தை பெற்றுள்ளது கர்ணன். இந்த ஆண்டு கண்டிப்பாக நடிகர் தனுஷிற்கு இந்த படம் பல விருதுகளை வாங்கித்தரும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். 

Tags: Karnan Dhanush Mari Selvaraj bollywood director Anand L Rai

தொடர்புடைய செய்திகள்

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!