மேலும் அறிய

Parineeti Chopra, Raghav Chadha: நெருங்கிய வட்டாரத்தினர் சூழ நிச்சயம்.. ஆம் ஆத்மி எம்பியை கரம்பிடிக்கும் பரினீதி சோப்ரா!

சுமார் 150 நெருங்கிய வட்டாரத்தினர் மட்டுமே விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விழாவில் அரசியல் மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காதல், திருமண கிசுகிசுக்கள் தாண்டி பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சட்டா இருவருகும் வரும் மே 13ஆம் தேதி நிச்சயம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பரினீதி - ராகவ் சட்டா காதல்

பாலிவுட்டின் பிரபல நடிகையும் ப்ரியங்கா சோப்ராவின் அத்தை பெண்ணுமான பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் தொடர்ந்து பல பொது இடங்களில் ஒன்றாக வலம் வரத் தொடங்கிய நிலையில், இவர்கள் இருவருமே தங்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு மௌனம் சாதித்து வந்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் லண்டன் எகானமிஸ் ஸ்கூலில் ஒன்றாகப் படித்ததாகவும், நீண்ட கால நண்பர்களான இருவரும் சமீபகாலமாக டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இச்சூழலில் இவர்கள் இருவருக்கும் வரும் மே 13ஆம் தேதி டெல்லியில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் திருமணம்

மேலும், சுமார் 150 நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விழாவில் அரசியல் மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பரினீதியும் ராகவ் சட்டாவும் இதுவரை தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், முன்னதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சீவ் அரோரா தன் ட்விட்டர் பக்கத்தில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்து இவர்களது உறவை உறுதிப்படுத்தி இருந்தார்.

 

ஐபிஎல் பார்க்க வந்த ஜோடி

டெல்லி மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ராகவ் சட்டா, இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். மேலும் இருவரும் பஞ்சாப், மொஹாலி மைதானத்தில் ஒன்றாக ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்தது பலரது புருவங்களை உயர்த்தியது.

நடிப்பு தாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைக்காட்டி வரும் பரினீதி, அடுத்ததாக சம்கிலா எனும் படத்தில் தோன்றவுள்ளார். இந்நிலையில் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது இரண்டாவது படமான இஷக்‌ஸாதே திரைப்படத்திற்காக 2012ஆம் ஆண்டு தேசிய விருது,(சிறப்பு விருது) பெற்ற பரினீதி, ஃபில்ம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்து பாலிவுட் தாண்டியும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget