மேலும் அறிய
Advertisement
சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் கன்ஃபார்ம்?! எவ்வளவு சம்பளம் கேட்டாங்க தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் “சீதா” கதாபாத்திரம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் படத்தில் நடிப்பதற்கு 12 கோடி ரூபாயை சம்பளமாக கேட்கிறாராம் கரீனா.
பாலிவுட்டின் தற்போது மிகப்பெரிய பட்ஜெட் செலவில், புராண கதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது “ஆதிபுருஷ் “ திரைப்படம். இந்த திரைப்படத்தை ஓம் ராவுத் இயக்குகிறார். படமானது ராமாயண கதையை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் ராவணனாக நடிக்கிறார். ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டை தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சாஜித்-பரம்பரா தற்பொழுது இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க இதேபோல ராமாயண கதையை மையமாக வைத்து , “சீதா” என்ற பெயரிலும் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. ஆனால் இதன் கதைக்களம் சீதாவின் பார்வையில் அமைய இருப்பதால் அதற்கேற்ற மாதிரியான கதாநாயகியை தேடும் படலத்தில் படக்குழு இறங்கியுள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் “சீதா” கதாபாத்திரம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் படத்தில் நடிப்பதற்கு 12 கோடி ரூபாயை சம்பளமாக கேட்கிறாராம் கரீனா. இதன் காரணமாக தற்பொழுது மீண்டும் படக்குழு ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
கரீனா கபூர் தனக்கு குழந்தை பிறந்த பிறகு திரைப்படத்தில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சீதா படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமானால் திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion