Blue Sattai Vs Vijay: மமிதாவிடம் வாயை விட்டு சிக்கிய தளபதி.. பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்! கடுப்பான ரசிகர்கள்!
தளபதி விஜய் அரசியல் நிலை குறித்து நடிகை மமிதா பைஜூ கூறியுள்ள தகவல் தற்போது அரசியல் வட்டாரத்திலும் திரைப்பட வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் தளபதி விஜய். 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இன்று அதிக சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கும் தளபதி விஜய், கடந்த ஆண்டு திடீரென அரசியல் பயணம் குறித்து அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கடந்த 3 வருடங்களுக்கு மேலாகவே தளபதி அரசியல் பணிகளை மறைமுகமாக துவங்கிவிட்ட போதிலும், விஜய் கடந்த ஆண்டு தான் இந்த தகவலை உறுதி செய்தார். தன்னுடைய கட்சிக்கு 'தமிழக வெற்றிக் கழகம்' என பெயர் வைத்த விஜய், கட்சி துவங்கிய அதே நாளில் தன்னுடைய கடைசி திரைப்படம் குறித்தும் அறிவித்தார்.

அதாவது 69-ஆவது படமே தன்னுடைய கடைசிப்படம் என்றும், அரசியலுக்கு வந்த பின்னர் நடிக்க மாட்டேன் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் தன்னுடைய அரசியல் செல்வாக்கை கூட்டும் விதமாக, பல்வேறு மாவட்டங்களில் லைப்ரேறி, அனைத்து மாவட்டத்தை சேர்ந்த 10 மற்றும் 10-ஆம் வகுப்பு மாறவர்களில், முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா போன்றவற்றை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 3 வருடமாக நடந்து வரும் இந்த பரிசு விழா நிகழ்ச்சிகள் அவ்வப்போது விமர்சனங்களுக்கு ஆளானாலும், விஜய் தன்னுடைய தொண்டர்களுடன் கை கோர்த்து தொடர்ந்து செய்து வருகிறார்.
வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர் போன்ற தலைவர்களை கொள்கை தலைவர்களாக வைத்திருக்கும் விஜய், தன்னுடைய வெற்றிக்கு வித்திடும் விதமாகவே தன்னுடைய அரசியல் வியூகத்தை மாற்றி வருவதை பார்க்க முடிகிறது. வருகிற 2026-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தளபதி விஜய் போட்டியிட தீவிரமாக தயாராகி வருகிறார். விஜய் கடைசியாக நடித்து வந்த ஜனநாயகன் படப்பிடிப்பு தற்போது முடிவு முடிவடைந்த நிலையில், அடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது சூறாவளி பயணத்தை துவங்க உள்ளதாகவும், மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகம் படத்தை, இயக்குனர் எச் வினோத் இயக்கி வரும் நிலையில், பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மீண்டும் மமிதா பைஜூ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தளபதி விஜய் பற்றி பேசி புதிய சர்ச்சையில் சிக்கவைத்துள்ளார்.
ஒருமுறை தளபதி விஜயம் இனி திரைப்படங்களில் நடிக்க மாடீர்களா என கேட்டதாகவும் அதற்க்கு மமிதா பைஜூவிடம் விஜய் 2026 தேர்தலை பொறுத்தே மீண்டும் நடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் கூறினாராம். இது தான் தற்போது அரசியல் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
தலீவர்:
— Blue Sattai Maran (@tamiltalkies) June 23, 2025
நடக்கறதை எல்லாம் பாத்தா இவன் மறுபடியும் நடிக்க வரப்போறது உறுதின்னு தெரியுது.
இவன்.. தேர்தல்ல ஜெயிச்சி சி.எம்.ஆகிட்டா.. 25 வருசமா அரசியலுக்கு வர்றேன்னு சொல்லி எங்களை ஏமாத்திட்டியேன்னு. என் ரசிகர்கள் கழுவி ஊத்துவாங்க.
தோத்துட்டா.. மறுபடியும் நடிக்க வந்துடுவான்.… pic.twitter.com/ynQbTXvRYv
குறிப்பாக தளபதி விஜயை மோசமாக கமெண்ட் போட்டு விமர்சனம் செய்துள்ளார். இந்த பதிவில் " தலைவர்: நடக்கறதை எல்லாம் பாத்தா இவன் மறுபடியும் நடிக்க வரப்போறது உறுதின்னு தெரியுது. இவன்.. தேர்தல்ல ஜெயிச்சி சி.எம்.ஆகிட்டா.. 25 வருசமா அரசியலுக்கு வர்றேன்னு சொல்லி எங்களை ஏமாத்திட்டியேன்னு. என் ரசிகர்கள் கழுவி ஊத்துவாங்க. தோத்துட்டா.. மறுபடியும் நடிக்க வந்துடுவான். ரெண்டுல எது நடந்தாலும் நமக்கு தாங்காது. டெலிகேட் பொசிசன். என பதிவிட்டுள்ளார். மேற்றொரு பதிவில் பங்கமாக கலாய்த்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா
மமிதா பைஜூ:
— Blue Sattai Maran (@tamiltalkies) June 23, 2025
ஜனநாயகன் உங்கள் கடைசி படமா என விஜய்யிடம் கேட்டேன். அது தேர்தல் முடிவை பொறுத்தது என்றார்.
விஜய்:
ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனதை இப்படி பொதுவுல போட்டு ஒடச்சிட்டியே.. என்ன குமுதா இதெல்லாம்? pic.twitter.com/8cGC3hmgGH





















