Bigg Boss Tamil 9: ஆதிரை.. வியானா.. FJ வலையில் விழுந்த அடுத்த பெண் போட்டியாளர்.. வெளியான வீடியோ!!
தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு புகழ் பெற காரணமே அதன் கட்டுப்பாடுகள் தான். இந்தி பிக்பாஸ் எல்லாம் பார்த்தால் தமிழில் பல விஷயங்கள் இருக்காது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளும் அரங்கேறி கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
ரசிக்க வைக்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. இந்த நிகழ்ச்சி 19வது சீசனாக இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 9வது சீசனாக உள்ளது. இதில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக பங்கேற்றார். பின்னர் அறிமுகமான 24 மணி நேர ஓடிடி வெர்ஷனை நடிகர் சிலம்பரசன் தொகுத்தார். தற்போது 2 சீசன்களாக நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக உள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு புகழ் பெற காரணமே அதன் கட்டுப்பாடுகள் தான். இந்தி பிக்பாஸ் எல்லாம் பார்த்தால் தமிழில் பல விஷயங்கள் இருக்காது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் எல்லை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இந்த நிகழ்வை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க காரணமாக அமைந்துள்ளது.
FJ வலையில் விழுந்த அடுத்த பெண் போட்டியாளர்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் முந்தைய சீசன்களை விட காதல், நட்பு போன்ற காட்சிகள் குறைவாகவே உள்ளது. அதேசமயம் சில எதிர்பாராத காட்சிகளும் நடந்தேறி வருகிறது. இதில் போட்டியாளரான FJ ஆரம்பத்தில் ஆதிரையுடன் நெருங்கி பழகினார். இந்த ஜோடியின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆதிரை வெளியேற்றப்பட்டார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை.
#Aurora after moving away from #kamurudin, now she is close with#FJ.. Watch #viyana reaction 🤪#BiggBossTamil9 pic.twitter.com/Hj0ZBpLvRO
— குருநாதா 🤘 (@gurunaatha1) December 2, 2025
இதன்பின்னர் FJ வியானாவுடன் நெருங்கி பழகினார். இந்த ஜோடி கடந்த வாரம் முழுக்க முழுக்க தனியே நேரம் செலவிட்டது. இதனை வார இறுதியில் விஜய் சேதுபதியிடம் பலரும் குற்றச்சாட்டாக முன்வைத்தனர். அவரும் இருவரையும் கண்டித்தார். இப்படியான நிலையில் நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த ஆதிரையை மீண்டும் உள்ளே அனுப்பியுள்ளனர். இப்படியான நிலையில் FJ - வியானா ஜோடி பிரிந்தது. அவர் அடுத்ததாக அரோராவுடன் ஐக்கியமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் லைவ் ஒளிபரப்பில் வரும் வீடியோவை இணைத்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.





















