மேலும் அறிய

Bigg Boss 7 tamil: அராஜகம் செய்யும் ஸ்மால் பாஸ் வீடு... கோல்ட் ஸ்டாரை வெல்லப்போவது யார்.. பிக்பாஸில் நேற்று நடந்தது என்ன?

Bigg Boss 7 tamil : ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் குரூப்பிஸம் அமைத்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பாடாய்படுத்துகிறார்கள். பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் 9 வது நாளான இன்று என்ன நடந்தது?

மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் 9 வது நாளான நேற்று ஏராளமான ட்விஸ்ட் பல்டி போட்டியாளர்களிடையே காணப்பட்டது. அதே சமயம் கோல்ட் ஸ்டாரை யார் வெல்ல போகிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. 

Bigg Boss 7 tamil: அராஜகம் செய்யும் ஸ்மால் பாஸ் வீடு... கோல்ட் ஸ்டாரை வெல்லப்போவது யார்.. பிக்பாஸில் நேற்று நடந்தது என்ன?
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 9ம் நாளான இன்று தொடக்கமே மார்னிங் பிரேக் பாஸ்ட்டுடன் சண்டையும் சச்சரவுமாகவே தொடங்கியது. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒரு மெனு போல அவர்களுக்கு தேவையானதை ஒரு ஆர்டர் போல கொடுக்கிறார்கள். ஆனால் இதை பார்த்த ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்ன நீங்க ஆர்டர் போடுறீங்க? மெனு மாதிரி கொடுத்தா பரவாயில்லை? என அதை வைத்து ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். அது பத்தாது என ஒரு டான்ஸ் வேற ஆடி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை வெறுப்பேத்துகிறார்கள். 

அதற்கு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கேப்டன் சரவண விக்ரமை வைத்து சரி பண்ண சொல்ல,  ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கேட்கிறார்கள். விக்ரம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் சென்று சுமுகமாக பேசி இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருகிறார். 

இந்த வாரம் கேப்டனாக சரவண விக்ரம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். அவரை ஒவ்வொருத்தரும் படாதபாடு படுத்துகிறார்கள். அவரும் எப்படியோ பேசி பேசி அனைத்தையும் சமாளித்து வருகிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். 
 
Bigg Boss 7 tamil: அராஜகம் செய்யும் ஸ்மால் பாஸ் வீடு... கோல்ட் ஸ்டாரை வெல்லப்போவது யார்.. பிக்பாஸில் நேற்று நடந்தது என்ன?

போன வாரம் அமைதியாக இருந்த ஸ்மால் பாஸ் வீடு இன்று தொடக்கமே அராஜகம் நிறைந்த அட்டுழியமாக இருக்கிறது. கன்டென்ட்காகவே இருந்தாலும் நியாயமின்றி ரொம்ப ஓவராக சவுண்ட் விடுகிறார் விஷ்ணு என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த கேட்டகிரியில் தற்போது மாயாவும் இணைந்துவிட்டார். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒரு குரூப்பிஸம் பாலோ பண்றாங்க. இந்த குரூப்பில் இருந்து சற்று விலகி நியாயமாக தன்னுடைய வேலையை செய்பவர் பிரதீப் மட்டும் தான். அவர் மட்டும் இன்று அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் பிக் பாஸ் வீட்டில் யாருக்கும் எதுவுமே சாப்பிட கிடைத்து இருக்காது. 

மாயாவும் பிரதீப்பும் பேசிக்கொள்கிறார்கள். இருவரும் மனம் திறந்து பேசி சமாதானமாகிறார்கள். குறும்படத்தில் மட்டும் நான் அப்படி உங்க அம்மா பற்றி பேசினது போல இருந்தால் நான் உங்கள் காலில் விழுந்து விடுகிறேன் என்கிறாள் மாயா. இருவரும் சமாதானம் ஆவதை பார்த்துக்கொண்டு இருந்த ஐஷு எனக்கு இது பிடிக்கவில்லை. நீங்க இரண்டு பேரும் சண்டை போடுங்கள் அது தான் நல்லா இருக்கு என்கிறாள். நாங்க கண்டிப்பா சண்டை போடுவோம் என்கிறார்கள். 

Bigg Boss 7 tamil: அராஜகம் செய்யும் ஸ்மால் பாஸ் வீடு... கோல்ட் ஸ்டாரை வெல்லப்போவது யார்.. பிக்பாஸில் நேற்று நடந்தது என்ன?
மாயாவும் பூர்ணிமாவும் ரகசியமாக பேசிக் கொள்கிறார்கள். பூர்ணிமாவுக்கு விக்ரம் மேல ஒரு கிரஷ் இருப்பது போல பேசிக்கொள்கிறார்கள்.  தொடர்ந்து நடைபெறும் ஹவுஸ் கிளீனிங் டாஸ்கில் விஜய் மற்றும் அக்ஷயா கலந்து கொள்கிறார்கள். விஜய் இந்த டாஸ்கில் வெற்றி பெறுகிறார். தோற்று போன போட்டியாளர் ஒரு பெர்பார்மன்ஸ் செய்ய வேண்டும் என சொல்லும் போது அக்ஷயா ஒரு கர்ப்பிணி பெண்ணாக சிறப்பாக அதை செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

வினுஷாவும், அக்ஷயாவும் ஜெயில் போகும் நிலை இருப்பதால் அவர்கள் இருவருக்கும் சக போட்டியாளர்கள் மிகவும் சப்போர்ட் செய்து வாய்ப்பு கொடுத்தது ஒரு நல்ல விஷயம். 'கழுவப் போவது யாரு' டாஸ்கில் வினுஷா மற்றும் ஐஷு கலந்து கொண்டதில் ஐஷு அந்த டாஸ்கில் வெற்றி பெற்றார். அதனால் இரண்டு டாஸ்கிலும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் தான் வெற்றி பெற்றனர். 

கோல்டன் ஸ்டார் டாஸ்க்கில் ஒருவரை ஒருவர் டிபேட் செய்து கொள்கிறார்கள். மற்றவர்களை விட நான் எந்த அளவிற்கு மக்களை சுவாரசியமாக வைத்து இருக்கிறேன் என பேச வேண்டும். மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க விடும் என கூறப்பட்டு இருந்தது. இன்று இந்த டாஸ்கில் கூல் சுரேஷ் மட்டுமே காமெடியாக பேசி இருந்தார். அத்துடன் இன்றைய நாளுக்கான எபிசோட் முடிவுக்கு வந்தது. நாளையே எபிசோடில் யார் கோல்ட் ஸ்டார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்துவிடும். 

தலைப்பு செய்திகள்

Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Embed widget