Bigg Boss 9 : இது என்ன ஸ்கூலா..? மறுபடியும் விமர்சனங்களை சந்திக்கும் விஜய் சேதுபதி..என்ன பேசினார் ?
Vijay Sethupathi : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முதல் வார இறுதியை எட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி விமர்சனங்களை சந்தித்து வருகிறார்

பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசன் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி முதல் வார இறுதியை எட்டியுள்ளது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து இரு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள். முதலில் நந்தினி தானாக விருப்பப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சக போட்டியாளர்கள் நாமினேஷன் அடிப்படையில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேறியுள்ளார். இந்த எபிசோட் நாளை அக்டோபர் 12 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படியான நிலையில் போட்டியாளர்களிடம் பேசிய விதம் குறித்து விஜய் சேதுபதியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ஆதிரையிடம் விஜய் சேதுபதி பேசியது என்ன ?
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர்களை சொல்லி அறிமுகப்படுத்த சொல்கிறார் விஜய் சேதுபதி. அப்போது ஆதிரை மட்டும் உட்கார்ந்தபடி தனது பெயரை சொல்ல விஜய் சேதுபதி அவரிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். மற்றவர்கள் எல்லாம் எழுந்து பேசுகையில் உங்களுக்கு என்ன பிரச்சனை என விஜய் சேதுபதி கேட்க. எழுந்து நின்று பதில் சொல்வது அவரவர் விருப்பம் என ஆதிரை பதில் சொல்கிறார். இதற்கு விஜய் சேதுபதி உங்களுடைய விருப்பத்திற்கு நீங்கள் இங்கு வரவில்லை. இந்த நிகழ்ச்சி அதைப் பற்றியதில்லை" என அவரிடம் கடுமையாக பதிலளிக்கிறார் விஜய் சேதுபதி
#Day6 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 11, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/rUuFRWGHnw
எழுந்து நிற்க இது என்ன ஸ்கூலா ?
பிக்பாஸ் வீட்டில் ஆதிரையின் நடவடிக்கைகள் குறித்து பார்வையாளர்களுக்கு பல விமர்சனங்கள் இருந்து வருகிறன்ற. மற்ற போட்டியாளர்களின் குறைகளை மட்டுமே ஆதிரை தொடர்ச்சியாக சுட்டிகாட்டி வருகிறார். அதே நேரத்தில் எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் முன் நின்று செயல்பட்டதில்லை என்பது ஆதிரை மீது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனாலும் எழுந்து நின்று தான் பதில் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை . எழுந்து நின்று பதில் சொல்ல இது என்ன ஸ்கூலா? என ஆதிரைக்கு ஆதரவு தெரிப்பவர்கள் விஜய் சேதுபதியை விமர்சித்து வருகிறார்கள்.





















