Bigg Boss Title Winner Prediction: பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்களில் ஒருவர் தான்! நெட்டிசன்கள் கணிப்பு பலிக்குமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு யாருக்கெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பரான நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 8. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார். இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ரணகளம் செய்தார்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு டுவிஸ் கொடுக்குறேன் என்ற பெயரில் முதல் 6 வாரங்கள் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்று போட்டியாளர்கள் இடம் பெற்று விளையாடி வந்தனர். இதில் சுவாரஸ்யம் இல்லாத நிலையில் இப்போது அனைவரும் ஒரே அணியாக விளையாடி வருகின்றனர். இதனால், ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 60 நாட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற டோல் டாஸ்கில் ஜெஃப்ரி வெற்றி பெற்றார். மேலும் இந்த வாரம் Angels vs Devils டாஸ்கில் போட்டியாளர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். தற்போது ரஞ்சித், அன்ஷிதா, சத்யா, ஆனந்தி, விஷால், பவித்ரா, ராயன், ஜெஃப்ரி, மஞ்சரி, ஜாக்குலின், முத்துராமன், தீபக், சௌந்தர்யா, சாச்சனா, அருண், தர்ஷிகா, ராணவ் என்று மொத்தமாக 17 போட்டியாளர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர்:
இந்த 17 போட்டியாளர்களில் யாராவது ஒருவர் தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னராக வர முடியும். அப்படி பார்த்தால் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு யாருக்கெல்லாம் இருக்கிறது என்றால் தர்ஷிகா, முத்துக்குமரன், விஷால், பவித்ரா, அருண், தீபக் ஆகியோருக்கு இருக்கிறது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருபவர்களில் இவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அதிக வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்று பார்த்தால் முத்துக்குமரன், பவித்ரா, தர்ஷிகா ஆகியோருக்கு இருக்கிறது. எனினும், இனி வரும் காலங்களில் டுவிஸ்ட் கொடுக்கும் பட்சத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக பெண் போட்டியாளர் வருவாரா? ஆண் போட்டியாளர் வருவாரா என்பதை நிர்ணயம் செய்யப்போவது மக்களே..




















