Sivaangi | பிரியங்கா வெளியே.. ஷிவாங்கி உள்ளே.. எல்லாத்துக்கும் காரணம் இந்த பிக்பாஸ் பயதானா?
ஷிவாங்கி தன் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன.
சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலமாக அனைவர் மனதையும் ஈர்த்தவர் ஷிவாங்கி . அனைவரும் தங்கள் வீடு செல்ல பிள்ளையாக அவரை கொண்டாடுகிறார்கள் . சூப்பர் சிங்கர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர் ஷிவாங்கி, அந்த சீசனில் வெற்றிபெறாத நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 1-இல் அறிமுகமானார் . சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 குக் வித் கோமாலியிலும் பங்கு கொண்டார் .
இந்நிலையில் , சீசன் 2 எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. மிகவும் கலகலப்பாக இந்த சீசன் நிறைவும் பெற்றது. அஸ்வின் ஷிவாங்கி ஜோடி மற்றும் ஷிவாங்கி புகழ் காம்போ அனைவராலும் ரசிக்கப்பட்ட காம்போ . இணையத்திலும் அண்ணா தங்கை என்று ஷிவாங்கி புகழ் ட்ரெண்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
சீசன் 2 முடிவதற்கு முன்னவே அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடிக்கும் "டான் " படத்தில் இணைந்தார். சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார்,கல்லூரி காதல், காமெடி சார்ந்த படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஷிவாங்கி தன் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன. தான் சின்னத்திரையில் கால்பதிக்க காரணமான சூப்பர் சிங்கரில் தற்போது ஷிவாங்கி தொகுப்பாளராக களமிறங்கவுள்ளார் என்பதே அந்த செய்தி. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. ஆங்கர் ஷிவாங்கி என எழுதப்பட்ட அறையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக போட்டியாளராக பங்கேற்ற நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே சூப்பர் சிங்கர் ஆங்கராக இருந்த பிரியங்கா பிக் பாஸ் செல்ல இருப்பதால் அவருக்கு பதிலாக ஷிவாங்கி உள்ளே வந்திருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா பிக் பாஸ்தான் செல்கிறாரோ என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தொகுத்து வழங்கிய மற்றொரு நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக்லும் அவர் சமீபத்தில் பங்கேற்பவில்லை.
ஷிவாங்கியின் புதிய தொடக்கத்துக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. எங்கு சென்றாலும் பாடுவதை ஷிவாங்கி விட்டுவிடக்கூடாது என்றும் பலர் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram