Biggboss Tamil 5 | "இவருக்கு நான் மாமன் முறை..." ஜெமினி-சாவித்ரியின் பேரனை அறிமுகப்படுத்திய கமல்..
அபிநயை, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.
ஜெமினி கணேசன் - சாவித்ரி இணையரின் பேரன் அபிநயை, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். இவருக்கு நான் மாமன் முறை என்றார் கமல். விவசாயம் சார்ந்த வேலைகளைச் செய்வதில் பெருமைப்படுவதாக சொன்னார் அபிநய்.
View this post on Instagram
கஷ்டப்படும் விவசாயிகளின் நிலத்தை வாங்கி, அல்லது குத்தகைவிட்டு அவர்களையே அதில் பயிர் செய்ய வைத்து, அவர்களின் கஷ்டங்களைத் தடுக்கிறேன். விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க நினைக்கிறேன் என தெரிவித்தார்.
லைனாக கண்டெஸ்டெண்ட்ஸ் எண்ட்ரி கொடுக்க, பிக்பாஸ் கவின் வந்து ஒரு அதிரடி பெர்ஃபாமன்ஸை போட்டதுடன், லிஃப்ட் ட்ரெயிலரையும் பிக்பாஸ் மேடையிலேயே அரங்கேற்றினார். முன்னதாக, Who's the hero, who's the hero பாட்டோடு பட்டையைக் கிளப்பி எண்ட்ரி கொடுத்தார் ப்ரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில தூள் கிளப்பிய ப்ரியங்கா வந்திருப்பதால், நிறைய பேச்சுக்கும், அவரின் ப்ராண்ட் மார்க்கான கலகலப்புக்கும் பஞ்சமே இருக்காதுன்னு தெரியுது. வாங்க பாஸ் வாங்க மோடில் ரசிகர்கள் குஷியானார்கள்.
நமிதா மாரிமுத்து ஜெயிக்காத திருநர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள் என அழகான ஸ்டேட்மெண்ட்டோடு உள்ளே வந்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நமிதா, கேமராவில் தன் சமூகம் சார்பாக தான் வந்திருப்பதில் பெருமை என பெருமிதம் தெரிவித்தார். அறிமுக வீடியோவில் அவ்வளவு அழகாக இருந்த நமிதா, அழகற்ற, பல கசடுள்ள சமூகத்தில் பிரச்சனைகளையும் சொன்னார்.
ஜெர்மனியில் இருந்து வந்த மாடல் மதுமிதா. தற்போது மென்பொறியாளராக பணிபுரிகிறார். அறிமுக வீடியோவில், அவ்வளவு அப்பாவித்தனம். உள்ளே வந்தபின்பும் அது அப்படியே இருக்குமா என ஆடியன்ஸ் சொல்லட்டும். உள்ளே வந்தவுடன், இசையிடமும், ராஜுவுக்கும் ஜெர்மனி தமிழில் டஃப் கொடுக்கிறார் மிமிக்ரி சென்ஸ் இருக்குனு தெரியும், காமன்சென்ஸ் இருக்கான்னு பாப்போம் என பாக்யராஜை இமிடேட் செய்து கமல்ஹாசனை அசத்திய ராஜுமோகன் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ராஜுவின் Introductory வீடியோ கலக்கியது.