Bigg Boss 7: பரபரப்பு எகிறுதே... பிக் பாஸில் என்ட்ரி தரும் வனிதா மகள் ஜோவிகா? அம்மாவை ஓவர்டேக் செய்வாரா?
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராகக் கலந்து கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முழு வேகத்துடன் பல மடங்கு பரபரப்புடன் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த முறையும் அனைவரின் ஃபேவரைட் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தனக்கே உரித்தான ஸ்டைலில் தொகுத்து வழங்க உள்ளார்.
தொடங்குகிறது பிக் பாஸ் 7 :
பிக் பாஸ் அடுத்த சீசன் தொடங்கப் போகுது என்ற அறிவிப்பு வந்த உடனே மக்களின் தேடல் என்னவாக இருக்கும்? கட்டாயமாக கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த விவரம் தான். அதற்கான அறிவிப்பு எப்போ வரும் என ஆவலுடன் காத்திருப்பார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டை ஹார்ட் ஃபேன்ஸ். இந்த சீசன் கொஞ்சம் அதிகமாகவே கலகலப்பாக அதே சமயத்தில் ரணகளமாக இருக்க போகிறது, இதற்கு காரணம் அந்த முறை 2 வீடுகள். இதுகுறித்த அறிவிப்பு வெளியானது முதல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறிவிட்டது.
என்ட்ரி கொடுக்கும் வனிதா மகள்
ஒவ்வொரு சீசனிலும் விறுவிறுப்பாக கொளுத்தி போடும் போட்டியாளர்கள் ஒருவரோ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ நிச்சயமாக இடம்பெறுவார்கள். அதில் மறக்கவே முடியாத ஒரு போட்டியாளர் என்றால் அது பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற வனிதா விஜயகுமார். சிறப்பாக விளையாடிய வனிதா விஜயகுமாரை தொடர்ந்து தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அம்மாவை போலவே இவரும் நிகழ்ச்சியில் பல சம்பவங்கள் செய்து நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஹீரோயின் ரெடி :
சமீபத்தில் தான் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடிய ஜோவிகா அவரின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் தயாராக விட்டாங்க என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இப்பவே அவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் குவியுதாம். இதற்காகவே அவர் பிரத்யேகமாக ஆக்ட்டிங் ஸ்கூலில் பயிற்சி பெற்று வருகிறாராம்.
அம்மாவை போலவே மகள் ஜோவிகாவும் சமையலில் கில்லாடி. அம்மா வனிதா தற்போது யூடியூப், பிசினஸ், நடிப்பு என பல விஷயங்களில் பிஸியாக இருப்பதால் அவரின் பிசினஸ் மற்றும் யூடியூப் சேனல் என அனைத்தையும் மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறார். பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுக்கும் ஜோவிகாவுக்கு மிகவும் ஒளிமயமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.
மற்ற போட்டியாளர்கள் யார் யார்?
மேலும் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக மாகாபா ஆனந்த், சின்னத்திரை நடிகைகள் ரவீனா தாஹா, நிவிஷா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் அப்பாஸ், உமா ரியாஸ், ரோஷினி ஹரிப்ரியன், சரத், தினேஷ், பஸ் டிரைவர் ஷர்மிளா, வி.ஜே. ரக்ஷன், தர்ஷா குப்தா, சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நிலா, காக்கா முட்டை விக்னேஷ், பிரிதிவிராஜ், உள்ளிட்டோர் அந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.