Pradeep Anthony: என்னால முடிஞ்சது.. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பிரதீப் பகிர்ந்த பதிவு.. வலுக்கும் ஆதரவு!
பிரதீப் கதவை மூடாமல் டாய்லெட் செல்கிறார், பெண்களிடம் காதல் செய்ய சொல்கிறார், போட்டியாளர்களிடம் எல்லை மீறி கெட்ட வார்த்தை பேசுகிறார் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.
UnFairEvictionOfPradeep: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு கவின், யுகேந்திரன், பிரியங்கா தேஷ்பாண்டே, சினேகன், பவானி, சனம் செட்டி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து ஆரம்பத்தில் இருந்தே ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்தவர் பிரதீப். சமூக வலைதளங்களிலும் பிரதீப்க்கு ஆதரவாக ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்தச் சூழலில் கடந்த வாரம் டாஸ்கின்போது கூல் சுரேஷை பிரதீப் ஆபாசமாகப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பெண் போட்டியாளர்கள் மீது மிளகாய்ப்பொடி தூவி விடுவேன் என்று கூறினார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசனிடம் பேசிய பெண் போட்டியாளர்கள் போர்க்கெடி தூக்கினர். அப்போது பிரதீப் பெண் போட்டியாளர்கள் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறார், கதவை மூடாமல் டாய்லெட் செல்கிறார், பெண்களிடம் காதல் செய்ய சொல்கிறார், போட்டியாளர்களிடம் எல்லை மீறி கெட்ட வார்த்தை பேசுகிறார் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.
இதுமட்டுமில்லாமல், கமலிடம் தனித்தனியாக பேசிய போட்டியாளர்கள் பிரதீப்க்கு எதிராக ரெட் கார்டு கொடுத்தனர். பெரும்பான்மையான போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுத்ததால் பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அப்போது பேசிய கமல் பெண்களின் பாதுகாப்பு கருதி பிரதீப் வெளியேற்றப்பட்டார் என்பதும், எங்கும் பெண்கள் அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விளக்கம் அளித்தார். இதற்கிடையே, பிக்பாஸ் வீட்டில் ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்த பிரதீப் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
#PradeepAntony #UnfairEvictionOfPradeepAntony #UnFairEvictionOfPradeep pic.twitter.com/A3NlH8D82K
— Perumal Samy (@4ba5e5c361c6498) November 5, 2023
இந்நிலையில், பல பிரபலங்கள் பிரதீப்புக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். கவின், ப்ரியங்கா தேஷ்பாண்டே, சினேகன், பவானி, நிரூப், சனம் ஷெட்டி என பலர் பிரதீப்க்கு ஆதரவாக டிவிட்டர் பதிவை வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தனக்கு கொடுத்த ஸ்டார் உள்ளிட்டவற்றை டிவிட்டரில் பகிர்ந்த பிரதீப் ”என்னால முடிஞ்சது” எனக் கூறியுள்ளார்.
My BB7 Trophies 🔥#EdhoEnnalaMudinjathu #SimpleStar pic.twitter.com/DjINKNBl2R
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 4, 2023
மேலும் படிக்க: 32 Years Of Thalapathy - Guna: நட்புக்காக களம் கண்ட ரஜினி.. காதலுக்காக உருகிய கமல்.. இன்றைய நாளில் நடந்தது என்ன?