மேலும் அறிய

BiggBoss Tamil Season 6: மக்களே.. பிக்பாஸ் சீசன் 6-இல் பங்கேற்க ஆசையா? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!

Bigg Boss Tamil Season 6: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு சூப்பர் வாய்ப்பு என பிக்பாஸ் குழு தெரிவித்துள்ளது.

Bigg Boss Tamil Season 6: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு சூப்பர் வாய்ப்பு என பிக்பாஸ் குழு தெரிவித்துள்ளது.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உடனே  விஜய் டீவி வெப்சைட்டை  Login செய்து பிக்பாஸில்  கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்ய வேண்டும். 
 
இந்த பிக்பாஸ் சீசன் 6-க்கான விளம்பரத்தை விஜய் டீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் சீசன் ஐந்தின் டைட்டில் வின்னர் ராஜூ நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் நடிகர் கமலஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படத்தின் பாடலின் மெட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும், இந்த விளம்பரத்தின் களம் டீக்கடையாக இருக்கிறது, இந்த டீக்கடைக்கு வேலன் டீ ஸ்டால் டிபன் சென்டர் என பெயரிடப்பாடுள்ளது. இந்த இரண்டுமே இந்த சீசனை நடிகர் கமலஹாசன் தொகுப்பாளராக வருகிறார் என்பதை மறைமுகமாக விஜய் டீவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பின் ஆறாவது சீசன் இந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆறாவது முறையாக கமல்ஹாசன் மீண்டும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவார் என்றும், ஏற்கனவே பிரபல போட்டியாளர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் ஒவ்வொரு சீசனிலும் பெரும்பான்மையான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பிரமுகர்கள் தவிர, ஜூலியானா மரியானா மற்றும் லாஸ்லியா மரியநேசன் போன்ற சிலரும் எதிர்பாராத போட்டியாளராக களமிறங்கினர். இந்நிலையில் ஜூலை மாதம் தொடங்கிவிட்டதால் பிக்பாஸுக்கான வேலை கெடுபிடியாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் செட் அமைக்கும் பணி என்றால்  மறுபக்கம் போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலை நடந்து வருகிறதாம். கடந்த முறை பிக்பாஸில் பங்கேற்பாளர்கள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் வரும் பிக்பாஸுக்கு சிறப்பான போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக வேலைபார்த்து வருகிறதாம். வழக்கம்போல் ட்ரெண்டிங்க், காமெடி, காதல் ஜோடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்தே போட்டியாளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில போட்டியாளர்களின் விவரம் கசிந்துள்ளது. அதன்படி ஏற்கெனவே தகவல் வெளியானப்படி, ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க டி. இமானின் முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 

BiggBoss Tamil Season 6: மக்களே.. பிக்பாஸ் சீசன் 6-இல் பங்கேற்க ஆசையா? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!

இமானை திருமணம் செய்து 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். அவர்களுக்கு பிளெசிகா மற்றும் வெரோனிகா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் மோனிக்காவின் பாதுகாப்பில் தற்போது இருக்கின்றனர். அதேபோல் விஜய் டிவியின் குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கும் ரக்‌ஷனும் போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வந்தநிலையில் தற்போது, பொதுமக்களும் பங்கேற்கலாம் என விஜய் டீவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget