Biggboss Tamil 5 | ”அண்ணாச்சியை, சேட்ஜியா மாத்துற முயற்சி நாடு முழுக்க நடக்குது” : கேப்பில் அரசியல் கிடா வெட்டிய கமல்..
வருண், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகன் என்பது கூடுதல் தகவல்.
அபினய்க்கு பிறகு, டிக்டாக்கர் நடியா சாங்கும், ஸ்டண்ட் கோச் வருணும் எண்ட்ரி கொடுத்தார்கள். வருண், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகன் என்பது கூடுதல் தகவல்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
இந்த குர்தாவைக் கொடுத்து என்னை சேட் ஜியா மாத்திட்டாங்க சார் என்றார் இமான் அண்ணாச்சி. அண்ணாச்சியை சேட்ஜியாக மாற்றும் முயற்சி நாடுமுழுக்க நடக்கிறது. ஆனால் அண்ணாச்சி, அண்ணாச்சியாகவேதான் என கேப்பில் அரசியல் கடாவை வெட்டினார் கமல். ஆடியன்ஸ் மத்தியில் அள்ளியது அப்லாஸ். நடக்கட்டும், நடக்கட்டும் மொமெண்ட்.
Who's the hero, who's the hero பாட்டோடு பட்டையைக் கிளப்பி எண்ட்ரி கொடுத்தார் ப்ரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில தூள் கிளப்பிய ப்ரியங்கா வந்திருப்பதால், நிறைய பேச்சுக்கும், அவரின் ப்ராண்ட் மார்க்கான கலகலப்புக்கும் பஞ்சமே இருக்காதுன்னு தெரியுது. வாங்க பாஸ் வாங்க. முன்னதாக நமிதா மாரிமுத்து ஜெயிக்காத திருநர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள் என அழகான ஸ்டேட்மெண்ட்டோடு உள்ளே வந்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நமிதா, கேமராவில் தன் சமூகம் சார்பாக தான் வந்திருப்பதில் பெருமை என பெருமிதம் தெரிவித்தார். அறிமுக வீடியோவில் அவ்வளவு அழகாக இருந்த நமிதா, அழகற்ற, பல கசடுள்ள சமூகத்தில் பிரச்சனைகளையும் சொன்னார்.





















