Biggboss Tamil 5 | தில்வாலேபுச்டானேச்சா.... தாமரைச்செல்வியிடம் பல்பு வாங்கிய ப்ரியங்கா..!
நாந்தானே உனக்கு ஃப்ரெண்ட். அப்போ யாரு நல்லா வேலை செஞ்சதுன்னு கேட்டா நீ யார் பேர சொல்லணும்னு பிட்டு போட்ட ப்ரியங்காவிடம், நாடியா என சொல்கிறார் தாமரை.
Biggboss Tamil 5 S5-October 15-promo 3
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரமான இந்த வாரம் நாமினேஷன், வாழ்க்கை கதை, க்ரூபிஸம் என வழக்கமான பிக் பாஸ் சீசனாக சுவாரஸ்யமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 12-வது எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வந்த நிலையில், இன்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் விடுமுறை நாள் கொண்டாட்டம் களைக்கட்ட உள்ளது.
”யார் நல்லா வேலை செய்றாங்கன்ற டாஸ்க் பத்தி கேட்பாங்க. அப்படிக் கேட்டா, நாந்தானே உனக்கு ஃப்ரெண்ட். அப்போ யாரு நல்லா வேலை செஞ்சதுன்னு கேட்டா நீ யார் பேர சொல்லணும்னு” பிட்டு போட்ட ப்ரியங்காவிடம், நாடியா என சொல்கிறார் தாமரை, மூன்றாவது ப்ரோமோவில். தாமரை மெதுமெதுவாக ஆட்டத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார் மக்களே.
View this post on Instagram
இரண்டாவது ப்ரோமோவில், கூட்டத்தில் காணாமல் போன இரண்டு நபர்களை குறிப்பிடும்படி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள், மதுமிதா, அபிநை, ஸ்ருதி, தாமரைச்செல்வி, இசை, அக்ஷரா ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்றது. ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நடியா, தன்னைத் தானே அந்த பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார். “கூட்டத்தில் காணமல் போவது நான் தான்” என சொல்லிக் கொள்கிறார். முதல் ப்ரொமோவிலேயே, ”விஜய தசமி அன்னைக்கு புதுசா கொளுத்தி போடுவாங்கனு நினைச்சுக்கூட பார்க்கலையேடா” என ப்ரியங்கா நக்கல் செய்ய, இரண்டாவது ப்ரொமோ அதை உறுதி செய்கின்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
#Day12 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/mgZDtL3W0p
— Vijay Television (@vijaytelevision) October 15, 2021