Bigg Boss 5 Tamil: கடைசி 8 போட்டியாளர்கள்: ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெல்லப்போவது யார்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இன்று ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடுகின்றனர்.
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய்யை அடுத்து டிசம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அக்ஷரா, வருண் என இருவரும் டபுள் எலிமினேட் செய்யப்பட்டனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் 85 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், மீதம் இருக்கும் 8 போட்டியாளர்களும் இன்று ‘Ticket to Finale’ டாஸ்க்கில் விளையாடுகின்றனர். போட்டியாளர்களுக்கு கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டிருக்கும் டின்னர் செட்-அப்பில் ஒவ்வொருத்தர் பற்றியும் போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில், இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதி இல்லாத ஒருவரை ஒவ்வொருத்தரும் நாமினேட் செய்ய வேண்டும். வழக்கமாக நடத்தப்படும் இந்த டாஸ்க் இந்த சீசனிலும் நடைபெற்றிருக்கிறது.
கடைசி 15 நாட்களே உள்ள நிலையில், இனி வரும் டாஸ்க்குகள் சவாலானதாகவும், எதிர்பாராதவிதமாகவும் இருக்கும் என தெரிகிறது. வைல்ட் -கார்ட் எண்ட்ரியாக வந்த இருவர் இன்னும் நிகழ்ச்சியில் தொடர்கின்றனர். நாட்கள் குறைவாக இருப்பதால், வரும் வாரம் அல்லது அடுத்த வாரம் மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ப்ரொமோ:1
#Day85 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/Ss1IRuD0RY
— Vijay Television (@vijaytelevision) December 27, 2021
பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 8 போட்டியாளர்கள்: தாமரைச் செல்வி, ப்ரியங்கா, பாவனி, ராஜூ, சிபி, அமீர், சஞ்சீவ், நிரூப்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்