BiggBoss 5 Tamil Promo: நேற்று மோதல், இன்று காதலா? ‛பாவனி ரசிகன்‛ அமீர் வாக்குமூலம்!
நேற்று மோதிக்கொண்ட அமீர், பாவனி இன்று மீண்டும் நண்பர்களாகி இருப்பது பிக் பாஸ் ரசிகர்களை ‘என்னடா இது’ என சொல்ல வைத்திருக்கிறது.
Bigg Boss 5 Tamil Day 65: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை அடுத்து டிசம்பர் 5-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் மீண்டும் அபிஷேக் எலிமினேட்டாகி வெளியேறி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான்று இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் விளையாட்டு, நடைபெற்றது. இதில், கடைசியாக அக்ஷரா, அமீர் போட்டியிட்டர். இதில், அமீர் வெற்றி பெற்று தலைவராக அறிவிக்கப்பட்டபோது பாவனி நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை தட்டிப்பறித்து கொண்டார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 65வது நாளுக்கான முதல் ப்ரொமோ இன்று வெளியானது.
அப்போது, அமீர் பாவனியைப் பார்த்து, “நான் உங்க ரசிகர்னு சொல்லும்போது சிரிச்சீங்கள? அப்புறம் இவங்க க்யூட்டா ஷையா சிரிப்பாங்க” என சொல்ல, “இந்த மாதிரி ஃபீலிங்கு எப்போதுல இருந்துனு கேக்கிறாங்க”னு பாவனி கேள்வி கேட்க, இருவருக்கும் நடுவில் இருந்த ப்ரியங்கா, “ஐயோ இந்த கொடுமையெல்லாம் நான் பார்க்கனுமா?” என நக்கலடித்து செல்கிறார்.
நேற்று மோதிக்கொண்ட அமீர், பாவனி இன்று மீண்டும் நண்பர்களாகி இருப்பது பிக் பாஸ் ரசிகர்களை ‘என்னடா இது’ என சொல்ல வைத்திருக்கிறது.
#Day65 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/ohs93DaKu9
— Vijay Television (@vijaytelevision) December 7, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்