Biggboss Tamil 5 | யோவ் பெருசு.. பிக்பாஸை வம்பிழுத்த இமான்.. நீயா, நானா.. ப்ரியங்கா அதிரடி. களைகட்டும் எபிசோட்
இமான் அண்ணாச்சி இசைவாணியைப் போலவும், சின்னப்பொண்ணையும் இமிடேட் செய்து காட்ட, ப்ரியங்கா இமானை இமிடேட் செய்கிறார்
![Biggboss Tamil 5 | யோவ் பெருசு.. பிக்பாஸை வம்பிழுத்த இமான்.. நீயா, நானா.. ப்ரியங்கா அதிரடி. களைகட்டும் எபிசோட் Biggboss 5 tamil chaos happens in Biggboss imman priyanka episodes Biggboss Tamil 5 | யோவ் பெருசு.. பிக்பாஸை வம்பிழுத்த இமான்.. நீயா, நானா.. ப்ரியங்கா அதிரடி. களைகட்டும் எபிசோட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/08/32eb666f7cc0f4870e418698c4cdfe48_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மூன்றாவது ப்ரோமோ ஒரு ஜாலி ப்ரொமோதான். பிக்பாஸை யோவ் பெருசு என கலாய்க்கும் இமான் ப்ரியங்காவையும், சின்னப்பொண்ணையும், இசைவாணியையும் கலாய்க்கிறார். ப்ரியங்கா விடுவாரா? துணிகளை அள்ளி வயிற்றில் அடித்து தொப்பையுடன் இமானைக் கலாய்க்கிறார். களைகட்டுகிறது பிக்பாஸ்.
View this post on Instagram
முதல் ப்ரோமோவில், இந்த சீசனில் அதிக ரசிகர்களை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் சின்னத்திரை நடிகை பவனி, தன்னுடைய கணவர் இறந்ததால் தான் சந்தித்த அனுபவங்களையும், பிரிவையும் பகிர்ந்தார். பொதுவாகவே அவரது தமிழ் பேச்சு கொஞ்சும் தமிழில் இருக்கும். இன்று நா தழுவ... தனது கொஞ்சும் மொழியில் அவர் தன் துயரங்களை மெதுவாய் பகிர்ந்த போது, போட்டியாளர்கள் பலரும் கலங்கினர். பார்வையாளர்களும் தான். அப்படி என்ன பேசினார் பவனி... இதோ உங்களுக்காக அவர் பேசியவை.. ‛‛ அவர் இறந்த போது எனக்கு அழகை வரல.. கோபம் தான் வந்துச்சு... அவ்வளவு கனவு இருந்துச்சு... அவ்வளவு கஷ்டப்பட்டோம்... இப்படி நடுவுல விட்டுட்டு போய்ட... ரொம்ப லவ் பண்ணிருக்கேன். ஒரு குழந்தை மாதிரி பாத்திருக்கேன். வாழ்க்கையில் தனியா இருக்கனும்னு என் தலையில் எழுதியிருக்கு போல...’’ என பவனி சிந்தி கண்ணீருடன் தன் நிலையை விளக்க, காணும் யாரும் கட்டாயம் கலங்குவார்கள்.
#Day5 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/aPXHqA5lcx
— Vijay Television (@vijaytelevision) October 8, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)