மேலும் அறிய

BiggBoss 5 Tamil Promo: நீங்க முதல்ல அடக்கமா இருக்கீங்களா?: தாமரைச் செல்வியிடம் கடுப்பான சிபி 

பட்டிக்காடா, பட்டினமா என்ற பெயரில் பிக்பாஸ் வீடு விவாத மேடையாக மாறுகிறது.

பிக்பாஸ் சீசன் 5ன் இன்றைய தினத்தின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது.

பட்டிக்காடா, பட்டினமா என்ற பெயரில் பிக்பாஸ் வீடு விவாத மேடையாக மாறுகிறது. முதலில் பட்டிக்காடே எனும் தலைப்பில் பேசுகிறார் ராஜூ (அதற்கேற்ற உடையை அணிந்து வந்துள்ளார்).  அவர் இமான் அண்ணாச்சியைப் பார்த்து நகரத்தில் இருந்துதான் வந்துள்ளார் ஆனால் அவரது கிராமத்து பேச்சு மாறவே இல்லை என கிண்டலடிக்கிறார். இப்படி ஜாலியாகத் தொடங்கும் புரோமோ இறுதியில் சண்டையில் நிறைவு பெறுகிறது. 

அடுத்ததாக பேசும் தாமரைச் செல்வி கிராமத்தின் பக்கம் நின்று பேசுகிறார். உடை அணிவதில் கிராமம் போன்று நகரம் இருக்க முடியாது. கிராமம் மாதிரி வரவே வராது என்கிறார். உடனே சுருதியின் முகம் சுருங்குகிறது. சுருதி உடை அணியும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிபி, நீங்க  அடக்கமா இருக்கீங்களா? என தாமரைச் செல்வியிடம் கேட்கிறார். 

இந்த பரப்பில், நான் என்ன செய்தேன்? என்னிடம் என்ன அடக்கமில்லை என நியாயம் கேட்டு புறப்படுகிறார் தாமரைச் செல்வி. அது வாக்குவாதமாக மாறித் தொடர்கிறது. இதே போன்று சர்ச்சைதான் பிக்பாஸ் 3ல் மதுமிதாவுக்கும், அபிராமிக்கும் இடையே வெடித்தது. 

25வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ வெளியானது. இந்த வார தலைவராக மது தேர்ந்தெடுக்கப்பட்டார். நெருப்பு ஆற்றல் இருக்கும் நாணயத்தை இசைவாணி பெற்றிருந்தார். இதனால் பிக் பாஸ் அவரை அழைத்து, இந்த நாணயத்திற்கு உண்டான பவரை பயன்படுத்தி கொள்ளுமாறு இசைவாணிக்கு அறிவுறுத்தினார். இதனால், போட்டியாளர்களை கண்காணித்து கொண்டு, ஆர்டர் போட்டு வந்தார் இசைவாணி.

இந்நிலையில், மதுமிதாவுக்கும் இசைவாணிக்கும் மோதல் வெடித்தது போன்ற காட்சிகள் இரண்டாவது ப்ரொமோவில் இடம் பெற்றுள்ளன. ”நான் சொன்னா யாரும் கேக்கல. இப்ப அவங்கதான் (இசைவாணி) அதிகாரம் பண்றாங்க. பிறகு நான் எதுக்கு? நான் எதும் செய்யாம எல்லாரையும் தூங்க சொல்லவா நான் இருக்கேன்” என மற்ற போட்டியாளர்களைப் பார்த்து அழுது கொண்டே கேட்கிறார். மற்றொரு புறம், பாவனி மற்றும் ஸ்ருதியிடம் இசைவாணி அழுதுக்கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார். இதனால், இந்த வாரம் கண்ணீர் கடலாய் மாறியுள்ளது இந்த பிக்பாஸ் வீடு.

25வது நாளுக்கான முதல் ப்ரொமோ வெளியானது. இதில், “அவரு மட்டும் நான் சொல்றத கேட்கவே மாட்டிங்கிறாரு. கேட்கலைனா, நேரடியாக கமல் சார்கிட்டையே பேசிக்கிறேன்” என அண்ணாச்சியைப் பற்றி சக போட்டியாளர்களிடம் இசைவாணி புகார் அளித்து கொண்டிருந்தார். 

அடுத்து, டைனிங் டேபிளில் கூடி இருந்த பிக் பாஸ் போட்டியாளர்கள், இசைவாணியின் தலைமைப் பண்பை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். “மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறீங்க” என ஒரு குரல் கேட்க, தாமரைச் செல்வி அடுத்து பேசினார். “பாசமா இருக்க, அப்புறம் மூஞ்சிய ஒரு மாதிரி வச்சுக்குற.. எனக்கு புரியல” என அவர் கடுகடுக்க, இசைவாணி, “இப்படியெல்லாம் பேசாதீங்க அக்கா” என குறுக்கிட்டு பேசுகிறார்.“நீ ரொம்ப ஹர்ட் ஆகுற” என மது சொல்ல, “அப்புறம் எனக்கு ஹர்ட் ஆகாதா” என காட்டமாகிறார்.

தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget