மேலும் அறிய

Bigg Boss OTT Tamil | பிக்பாஸ் ஓடிடி அப்டேட்!! உள்ளே வர எல்லாருமே வேற லெவல்.! டிஆர்பியை எகிறவைக்க ப்ளான்.!

பிக்பாஸ் ஓடிடியில் 12 போட்டியாளர்கள் 60 நாள்கள் தங்கும்படி ஆரம்பிக்கப்பட்டவுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்களின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது.  

மக்களிடம் மிகவும் பிரபலமான பிக்பாஸ் தற்போது ஓடிடியில் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில், அதிரவைக்கும் போட்டியாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்துள்ளனர்.

இன்றைய காலத்தில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களை விட மக்களிடம் ரியாலிட்டி ஷோக்கள் மீதான ஆர்வம் தான் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு விதவிதமான ஷோக்களை நடத்திவருகின்றனர். அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சி மக்களிடம் மிகுந்த பிரபலமாகியுள்ளது. குறிப்பாக இதில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் ஷோவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 ல் ராஜு டைட்டில் வின்னர் ஆனார்.

இதனையடுத்து விஜய்டிவி தற்போது மீண்டும் பிக்பாஸ் ஓடிடி எனும் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பத் திட்டமிருக்கிறது. இந்நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ப்ரோமா ஒன்று வெளியாகி தற்போது சோசியல் மீடியாவை கலக்கிவரும் நிலையில் யார் இதில் கலந்துக்கொள்ளவிருக்கிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

  • Bigg Boss OTT Tamil | பிக்பாஸ் ஓடிடி அப்டேட்!! உள்ளே வர எல்லாருமே வேற லெவல்.! டிஆர்பியை எகிறவைக்க ப்ளான்.!

இந்நிலையில் தான், கடந்த பிக்பாஸ் 4 சீசன்களிலும் நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்ததோடு, யாரால் டிஆர்பியை ஏற்றியதோ? அவர்கள் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் 12 போட்டியாளர்கள் 60 நாள்கள் தங்கும்படி ஆரம்பிக்கப்பட்டவுள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்களின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன் விபரங்களும் தற்போது வெளியாகியுள்ள நிலையில் யார் அவர்கள் என்று நாமும் அறிந்துக்கொள்வோம்.

பிக்பாஸ் புகழ் ஓவியா- களவாணி, மெரினா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அதன் மூலம் பிரபலமாகாத ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர்க்கென்றே தனி ஆர்மி உருவாக்கியதோடு சமூகவலைத்தளங்களையே அதிரவைத்தது. இவர் தற்போது மீண்டும் பங்கேற்க விருப்பது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலி – ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய ஒட்டுமொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார். தற்போது இவர் என்ன ரீல்ஸ் போட்டாலும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

சினேகன் – கவிஞராக வலம் வந்த இவர், பிக்பாஸ் சீசன் 5 ல் கட்டுப்பிடி சினேகனாக மாறியது குறித்து ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர். இந்த பிக்பாஸ் ஓடிடியில் இவரும் கலந்துக்கொள்ளவிருப்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 பரணி – முதல் சீசனிலே சுவர் ஏறி குதித்த போட்டியாளர் என்று பெயர் பெற்றவர் தான் பரணி. அந்தளவிற்கு வீட்டில் மற்ற போட்டியாளர்களின் டார்ச்சல் அதிகம். மன உளைச்சலின் இவ்வாறு செய்த இவர் தைரியத்தோடு பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்கவிருப்பது பாராட்டுகளைப்பெற்றுள்ளது.

 வனிதா விஜயகுமார் – சண்டைக்கு பஞ்சமே இல்லாமலும், அதிக பரபரப்பையும் ஏற்படுத்தியது இவர் கலந்துக்கொண்ட பிக்பாஸ் சீசன் தான். இதன் காரணமாகவே எலிமினேட் ஆன இவர் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார். தற்போது புதிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் மீண்டும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Bigg Boss OTT Tamil | பிக்பாஸ் ஓடிடி அப்டேட்!! உள்ளே வர எல்லாருமே வேற லெவல்.! டிஆர்பியை எகிறவைக்க ப்ளான்.!

 சுரேஷ் சக்ரவர்த்தி –  பிக்பாஸ் சீசனின் தாத்தா என்றழைக்கப்பட்ட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். நிகழ்ச்சியில் தேவையற்ற வார்த்தைகளை விட்டு பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.  ஆனால் இவர் இருக்கும் இடத்தில் சண்டைக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்கிறார்.

அபிராமி – முகேன் உடன் காதல் சர்ச்சையில் சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்திய அபிராமி. தற்போது மீண்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இருக்கிறார்.

 இப்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இதுப்போன்று போட்டியாளர்களுடன் தொடங்கவுள்ள பிக்பாஸ் ஓடிடி 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகவுள்ளது. எனவே நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget