Bigg Boss Tamil Season 9: கோலாகலாமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 9... போட்டியாளர்கள் யார்? வெளியான தகவல்!
ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை மறு நாள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது

ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நாளை மறு நாள் நடைபெற உள்ளது. இச்சூழலில் தான் இந்த நிகழ்ச்சியில் யார் யார் எல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 9:
பிரபல தொலைக்காட்சியான விஜய் டீவியில் வருடம் ஒரு முறை வெளியாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 8 சீசன்கள் முடிந்துள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 9 நடைபெற உள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இச்சூழலில் தான் இந்த சீசன் 9-ல் போட்டியாளர்களாக யார் யார் எல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
போட்டியாளர்கள் யார்?
இந்த நிலையில் தான் இந்த சீசனில் களம் இறங்க உள்ள போட்டியாளார்கள் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாட்டர்மெலன் ஸ்டார் டாக்டர் திவாகர், விஜே பார்வதி, ராஜா ராணி சீரியல் சித்து, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா, மிர்ச்சி கெமி, பொன்னி சீரியல் நடிகர் சபரிநாதன், ஆதிரை சவுந்தரராஜன், நடிகர் வினோத் பாபு, சீரியல் நடிகர் புவி அரசு, கலக்கப் போவது யாரு புகழ் ராஜவேலு, யூடியூப் பிரபலம் அகமது மீரான் ஆகியோர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த சீசனை போல் இந்த சீசனும் இருக்குமா என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள். அந்த வகையில் இதில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவரகளின் செயல்பாடுகளை பொறுத்து தான் இது அமையும். அதேபோல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி வழி நடத்துவார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த முறை விஜய் சேதுபதியே ஒரு சில தவறுகள் செய்ததாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். இப்படிப்பட்ட சூழலில் இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெறும் என்றும் சொல்லப்படுகிறது.






















