மேலும் அறிய

Bigg Boss: "அர்னவ் நீ பக்கா Fake! அருண் அப்பாவி இல்ல" பிக்பாஸ் போட்டியாளர்களை விளாசித் தள்ளிய ரவீந்தர்!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ரவீந்திரன் ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பிக்பாஸ் மேடையிலே தனது கருத்தை கூறினார்.

தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிகளவு ரசிகர்களை கொண்ட ஷோவாக இருப்பது பிக்பாஸ். இந்த பிக்பாஸ் சீசன் 8ல் நடிகர் ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் சாச்சனா, சௌந்தர்யா என பலரும் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார். இதனால் இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அர்னவ் ஃபேக், தீபக் நடிக்காதீங்க:

இந்த நிலையில், பிக்பாஸ் சீசனில் இருந்து ரவீந்திரன் நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் பிக்பாஸ் விமர்சகராக இருப்பதால் நேற்று பிக்பாஸ்  மேடையிலே விஜய் சேதுபதி முன்பு ஒவ்வொரு போட்டியாளரை பற்றியும் பேசினார்.

“ அர்னவ் நீ பக்கா ஃபேக். நீ ஒழுங்கா ஆடு. ரஞ்சித் சார் வாய்ப்பு அப்படிங்குறது கிடைக்குற இடத்துல சாமி, தங்கம் இதுவும் ஸ்ட்ரேட்டர்ஜிதான். ரொம்ப நாள் இதுல நடிக்க முடியாதுங்குறதாலதான் நானே வெளியில வந்துட்டேன். ரொம்ப நாள் இதுல ஆட முடியாது அப்படிங்குறதாலதான் நானே வெளியில வந்துட்டேன்.

தீபக் பிரதர் எப்பவுமே எதிரியை முன்னாடி அடிக்கனும். பின்னாடி அடிக்கக்கூடாது. முன்னாடி பேசனும். பின்னாடி பேசக்கூடாது. பின்னாடி பேசனும்னு முடிவு பண்ணிட்டா முன்னாடி நடிக்கக்கூடாது. தெளிவா சொல்றேன். ஆண்கள்கிட்ட ஜால்ரா இருக்குது, அது இருக்கக்கூடாது. உங்க மனசாட்சிதான் பெரிய கேமரா.

அருண் அப்பாவி அல்ல:

அருண் நீ எல்லார்கிட்டயும் முன்னாடி ஒன்னு. பின்னாடி ஒன்னு அப்பாவியா நடிக்குற. நீ பக்கா அப்பாவி கிடையாது. உனக்கு எல்லாம் தெரியும். ஆனா  தெரியாத மாதிரி ஆடாத. தெரிஞ்சு ஆடு. சத்யா இங்க பாடி முக்கியம் இல்ல. மைண்ட். விஷால் நீ என்ன சமைச்சே கொன்னுட்ட. யாரும் உனக்காக யோசிக்க மாட்டாங்க. நீ உனக்காக யோசிக்கனும். யாரு யோசிக்குறதையும் நீ பொதுக்கருத்தா எடுக்காத.

இந்த வீட்டிலயே ஒரு என்டர்டெயினர் நீ மட்டும்தான். ஜெஃப்ரி வாயை வார்த்தையை கவனமா பயன்படுத்து. இது உன் வாழ்க்கையே மாத்திடும். பவித்ரா பாய்ஸ் அணியில நீ 6 நாளும் ஏதோ ஒரு முயற்சி பண்ணிகிட்டே இருந்த. அதுலயும் நீ அதுக்கு ரியலா இல்ல. இந்த கேம்ல அதுக்கு ரியலா இரு.

சுனிதான் நேர்மை:

முத்துக்குமரா இந்த தளத்தை எப்படி பயன்படுத்தனும்னு அதிக ஆற்றலும், அறிவும், பேச்சுத்திறமையும் உன்கிட்ட இருக்கு. வியூகத்தை ஏற்படுத்து. நான் நம்புற ஒரு ஆளுல்ல நீயும் ஒரு ஆள். சௌந்தர்யா நீ எதுக்காக வந்தியோ அதை நோக்கி நீ முன்னாடி போகனும்னா உக்காந்து பெஞ்சு தேக்குறதை நிறுத்தனும். டான்ஸ் ஆடிட்டு சமைச்சுட்டு தூக்கம் வந்தா தூங்குறது கேம் இல்ல.

தர்ஷா நீ விளையாட்ற பாதி கேம் ஃபேக். அது உள்ள இருக்குறப்ப பச்சையா தெரிஞ்சது. சுனிதா நான் நம்புற நீ ஒரு நேர்மையான உண்மை. தமிழ்நாடு உன்னை நிச்சயம் கொண்டாடும். அன்ஷிதா நல்லா விளையாடு. கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்து. அன்ஷிதா நல்லா விளையாடு. கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்து. தர்ஷிகா நீ செம கேடி. ட்விஸ்ட் பண்ணி ஒன்னு பண்ணிகிட்டுதான் இருக்க. கொஞ்சம் யதார்த்தமா கொடு. சாச்சனா தேவைப்பட்ற இடத்துல பேசு. தேவையில்லாத இடத்துல நீயே பேசி மாட்டிக்காத.

ஜாக்குலின் இந்த கேமோட களம் புரிஞ்சு விளையாடு. நான் நம்புற இரண்டாவது ஸ்ட்ராங் ரியல் பெர்சன் நீதான். ஆனந்தி உண்மையிலே நீ சூப்பர் மனுஷி. இதை பயந்து பயந்து ரொம்ப நாள் தள்ளிப்போட முடியாது, சனி, ஞாயிறு ஸ்கோர் பண்றது முக்கியமில்ல.  மீதி 5 நாளும் பண்ணனும். “

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget