மேலும் அறிய

Bigg Boss Tamil 7: கொலை மிரட்டல் விடுத்த நிக்‌சன்.. ரெட் கார்டா இல்லை வார்னிங்கா? என்ன செய்யப்போகிறார் கமல்?

Bigg Boss 7: பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததில் மிகவும் சந்தோசப்பட்ட போட்டியாளர் என்றால் அது நிக்‌சன் தான்!

தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் வரவேற்பைப் பெற்று டி.ஆர்.பியில் டாப்பில் உள்ள நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான். இந்த சீசன் இதற்கு முன்னர் நடைபெற்ற 6 சீசன்களை விடவும் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு உள்ளது. 

இதில் இதுவரை நடக்காத வகையில் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் ஆண்டனியால், ”பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என சக போட்டியாளர்களால் உரிமைக் குரல் தூக்கப்பட்டது. இது  மட்டும் இல்லாமல் மெஜாரிட்டி போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கலாம் எனக் கூறிய நிலையில் , நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களிடம் பேசியதை அடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, சரவண விக்ரம், கானா பாலா, விஷ்ணு, நிக்‌ஷன், மணி, ரவீனா, விணுஷா, ஆர்.ஜே. ப்ராவோ மற்றும் அக்‌ஷயா என மொத்தம் 13 போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கலாம் எனக் கூறினர். இவர்கள் அனைவரும் கூறிய வார்த்தை, ”பிரதீப்பினால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர் செய்வது தவறு என கூறினாலும் அதனை மாற்றிகொள்ள மாட்டேன் என அவர் கூறுகின்றார், அதிகப்படியாக கெட்டவார்த்தைகள் பேசுகின்றார், பெண்களை மிகவும் கொச்சையாக விமர்ச்சிக்கின்றார், அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றார்” என்பவைதான்.

இவர்கள் எல்லாம் இவ்வாறு கூற, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனோ, ‘நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களிடம் பேசினேன், ஸ்பான்சர்கள் மட்டும் பிரதீப் ஆண்டனியை வெளியேற்ற ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நான் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியிருப்பேன் எனக் கூற, போட்டியாளர்கள் கைத்தட்டலையும் விசிலையும் பறக்கவிட்டனர். இதில் மிகவும் சந்தோசப்பட்ட போட்டியாளர் என்றால் அது நிக்சன். 

Bigg Boss Tamil 7: கொலை மிரட்டல் விடுத்த நிக்‌சன்.. ரெட் கார்டா இல்லை வார்னிங்கா? என்ன செய்யப்போகிறார் கமல்?

இவையெல்லாம் ஒருவாரம் நடக்க, அடுத்த வாரத்தில் இருந்து, பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தவர்கள் வரிசையாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி விஜய் டிவி  வெளியிட்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான 4 ப்ரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் புகைச்சலையும் கிளப்பியுள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நிக்‌சனுக்கும் அர்ச்சனாவுக்கும் காரசாரமான விவாதம் நடந்துள்ளது தெரியவந்தது. இதில் மதியம் 12 மணிக்கு வெளியான ப்ரோமோவில் நிக்‌சன், ”வைல்ட் கார்டில் எப்படி வந்தயோ அப்படியே ஓடிடு, நான் எல்லாம் கலாய்க்க ஆரம்பச்சனா நீயெல்லாம் மூணு நாளைக்கு உக்காந்து அழுகனும், ச்சீ பொண்ணா அது, மூஞ்சிய பாரு, சொருகீடுவேன்” எனக் கூறினார். நிக்‌சனின் இந்த வார்த்தைகளால் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

பெண்களின் பாதுகாப்பு பற்றி பக்கம் பக்கமாக பேசி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்த நிக்‌சன் தற்போது, அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் ’சொருகிடுவேன்’ எனக் கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், கமல்ஹாசனும் என்ன செய்யப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிக்‌சன் இரண்டாவது நபராக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிக்‌சனின் இந்த செயலால் அவர் வெளியேற்றப்படுவாரா அல்லது நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, இன்று வெளியான 4வது புரோமோவில் அர்ச்சனா, விஷ்ணு,  தினேஷ் மற்றும் மணியுடன் இணைந்து உரிமைக்குரல் எழுப்புவது தொடர்பாக பேசி வருவது தெரிகின்றது. இதனை கூல் சுரேஷ்  வழக்கம்போல் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டு உள்ளார். 

நிக்‌ஷன் சிதறவிட்ட வார்த்தைகள்

இதற்கு முன்னர் நிக்‌சன் சில வார்த்தைகளை விட்டுள்ளார். அதாவது, “ஆவடிக்கு வாங்க நான் யார்னு தெரியும்” என பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் நிக்‌சன் சக பெண் போட்டியாளரை நோக்கி, “பெண் என்றால் இது இது இப்படி இருக்கணும், இது இது இப்படி இருக்கணும், பூர்ணிமா மாதிரி இருந்தா ஓ.கே” எனக் கூறியுள்ளார். இதற்கு நிக்‌சன் தனது தரப்பு விளக்கத்தினை கொடுத்தாலும் இன்றுவரை பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் சமூக வலைதளத்திலும் தொடர்ந்து பேசப்பட்டுதான் வருகின்றது. 

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget