Bigg Boss 6 Tamil House: பிக்பாஸ் சீசன் 6 வீடு... இந்த முறை புதிய வசதிகள் அறிமுகம்... இதோ பிக்பாஸ் வீடு டூர்!
Bigg Boss 6 Tamil House: ஒவ்வொரு சீசனிலும் வீடு அப்படியே முற்றிலுமாக வேறு டிசைனுக்கு மாற்றப்படுவது வழக்கம். இந்த முறையும், கலர்புல்லாக வீடு மாற்றப்பட்டுள்ளது.
Bigg Boss 6 Tamil House: இதோ அதோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது. விஜய் டிவியில் சீசன் 1 தொடங்கிய நாளிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பொதுமக்களுக்கு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. அதற்கு போட்டியாளர்கள் தேர்வும் ஒரு காரணம்.
பிரபலமானவர்கள் என்பதை கடந்து, சர்சைக்குரியவர்கள், சர்சையை ஏற்படுத்தக் கூடியவர்கள் என அடுத்தடுத்து அன்றைய ட்ரெண்டில் இருப்பவர்களை களமிறக்கிய வகையில், பார்வையாளர்களின் பரபரப்பான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது விஜய் தொலைக்காட்சி. அதுமட்டுமின்றி, சமகால கேலியும், கிண்டலுக்கும் பெரிய கன்டெண்ட் கொடுத்ததும் அந்த நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு வந்து வாய்ப்பை இழந்தோம் என ஒரு தரப்பினர் கூறுவதையும் கேட்க முடிகிறது. வாழ்வு கிடைத்தது என மற்றொரு தரப்பினர் சொல்வதையும் கேட்க முடிகிறது. இப்படி பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும், ஒவ்வொரு சீசன் தொடங்கும் போது, முந்தைய பரபரப்பு சிறிதும் குறையாமல், பிக்பாஸ் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் என பெரிய லிஸ்ட் புழக்கத்தில் உள்ளது. அதன் படி...
ஜி.பி.முத்து
Fatman ரவீந்தர்
நடிகை ஷில்பா மஞ்சுநாத்
விஜய்டிவி மைனா
பாடகி ராஜலட்சுமி
சீரியல் நடிகை ஆயிஷா
VJ மகேஸ்வரி
அமுதவானன்
மதுரை முத்து
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்
நடிகை விசித்ரா
சீரியல் நடிகை ஸ்ரீநிதி
மணிகண்டன்(ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பி)
ஆகியோரது பெயர்கள் தான், தற்போது வரை போட்டியாளர்கள் பட்டியலில் உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இரு நாட்களில் எல்லாம் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கிய அம்சமான பிக்பாஸ் வீடு பற்றிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. வழக்கம் போல, ஊடகவியலாளர்களை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்றது தயாரிப்பு நிறுவனம். உள்ளே சென்றவர்கள், வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு வியந்து போயுள்ளனர்.
#BiggBosstamil6 House ...#Biggboss6tamil #biggboss6 #house pic.twitter.com/2xmHjGBn9n
— Senthamiz (@TamilcinemaTM) October 7, 2022
View this post on Instagram
ஒவ்வொரு சீசனிலும் வீடு அப்படியே முற்றிலுமாக வேறு டிசைனுக்கு மாற்றப்படுவது வழக்கம். இந்த முறையும், கலர்புல்லாக வீடு மாற்றப்பட்டுள்ளது. படுக்கை அறை, உலாவும் அறை, வெளிப்பகுதி என அனைத்தும் முற்றிலும் மாறியுள்ளது. கடந்த சில சீசன்களாக தவிர்க்கப்பட்ட நீச்சல் குளம் , இந்த முறை இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு மிக முக்கியமாக கருதப்படும் பிக்பாஸ் வீடு, இந்த சீசன் 6க்கும் பெரும் பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.