Biggboss Tamil 5 | `நீ யார்னு எனக்குத் தெரியும்!’ - ராஜுவுக்கு பதிலளித்த அபினய் மனைவி..
ராஜூ வெளிப்படையாக அனைவரின் முன்னிலையிலும், `பாவ்னியை லவ் பண்றீங்களா’ என்று கேட்க, போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு அபினயின் மனைவி அபர்ணா கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் தொடர்பு உண்டு. சர்ச்சைகளால் உயிர்ப்புடன் வாழ்கிறது பிக் பாஸ் வீடு. 18 பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் 6 பேர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது புதிதாக 2 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே, அபினய், பாவ்னி ரெட்டி ஆகிய இருவரும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து பயணித்து வந்தனர்.
போட்டியின் 13வது நாளன்று, அபினய் தன்னைக் காதலிப்பதாக எண்ணிய பாவ்னி, அவரிடமே நேரடியாகக் கேட்டார். அப்போது அபினய் அதனை மறுத்ததோடு, இந்த விவகாரம் முடிந்ததாக கருதப்பட்டது. எனினும், அதன்பிறகும், அபினய், பாவ்னி ஆகியோர் இடையிலான உறவு தொடர்ந்து வந்தது. சமீபத்தில் பிக் பாஸ் நடத்திய `ட்ரூத் ஆர் டேர்’ விளையாட்டில், மனதில் பட்ட கேள்விகளைப் போட்டியாளர்கள் தங்களுக்குள் கேட்கலாம் எனக் கூறப்பட்டது. பலரும் தங்கள் மனதில் இருந்த கேள்விகளைப் பிற போட்டியாளர்களிடம் கேட்டு, பதில் பெற்றுக் கொண்டனர். சில போட்டியாளர்கள் `டேர்’ தேர்ந்தெடுத்து, விளையாட்டுகளையும் ரசிக்கும்படியாகச் செய்தனர்.
அதில் ஒரு சுற்றில், ராஜூ, அபினயிடம் கேள்வி கேட்குமாறு சூழல் உருவானது. அப்போது ராஜூ வெளிப்படையாக அனைவரின் முன்னிலையிலும், `பாவ்னியை லவ் பண்றீங்களா’ என்று கேட்க, போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். விளையாட்டு முடிந்த பிறகு, ராஜூவிடம் பிற போட்டியாளர்கள், அபினய்க்குக் குடும்பம், குழந்தை ஆகியவை உள்ளது என்றும், இந்தக் கேள்வி தவறானது எனவும் கூற, ராஜூ தான் யதார்த்தமாக மனதில் பட்டதைக் கேட்டதாகக் கூறி முடித்துக் கொண்டார். எனினும், இணையத்தில் ராஜூவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இணையத்தில் கருத்துகள் பரவி வருகின்றன.
View this post on Instagram
அபினய், பாவ்னி ஆகியோரைப் பிற போட்டியாளர்கள் ஜோடி சேர்த்துப் பேசிய பழைய எபிசோட்களின் வீடியோக்களோடு ராஜூவுக்கு ஆதரவாக ஒரு பக்கமும், ராஜூ இவ்வாறு பகிரங்கமாக கேள்வி எழுப்பியது தவறு எனவும், அவர் பாவ்னியைக் குறிவைக்கிறார் எனவும் ராஜூவுக்கு எதிர்ப்பாகவும் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில், ராஜூவின் இந்தக் கேள்விகள் குறித்து அபினயின் மனைவி அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், `முடிவில் நீ எந்த மாதிரியான நபர் என்பது எனக்குத் தெரியும். என்னைப் போல உன்னைத் தெரிந்தவர்களோ, புரிந்துகொண்டவர்களோ யாரும் இல்லை. எப்போதும் லவ் யூ. அபர்ணா அபினய்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.