Bigg Boss 7: விதிமுறைகள மதிக்கல.. பிக்பாஸையே புலம்ப வைத்த சீசன்.. பூர்ணிமா மாயா இடையே வெடித்த மோதல்!
Bigg Boss Tamil 7: "இந்த வீட்டாருக்கு விதிமுறைகள மதிக்கும் தன்மை இல்லை என்பது எனக்கு இப்போ தெளிவா தெரியுது. நான் ரொம்ப ரொம்ப டிஸப்பாயிண்ட் ஆகிட்டேன்” என பிக்பாஸ் கடுமையாகப் பேசியுள்ளார்.
பிக்பாஸ் (Bigg Boss) வீட்டில் இன்றை எபிசோடில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெறுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டாஸ்க் தொடங்கி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கரன்சி கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸையே நோகடித்த போட்டியாளர்கள்!
வழக்கமாக போட்டியாளர்களின் பெர்ஃபாமன்ஸூக்கு ஏற்ப, கரன்சி அவர்களுக்குள் கைமாற்றமாகி இறுதியில் அதிகம் சம்பாதித்தவர்கள் சுற்றின் சிறந்த போட்டியாளர்களாக தேர்வாவார்கள். இந்நிலையில், இந்த டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கில் இதே போன்று அனைவருக்கும் கரன்சி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில் “உங்களுக்கு வழங்கப்பட்ட கரன்சியை பகிர்ந்துக்கறது, பிரிச்சுக் கொடுக்கறதுனு ஏன் உங்க வேல்யூவ குறைச்சிக்கிட்டீங்க? போர்டுல எது எழுதினாலும் பார்த்துட்டு விட்டுடுவேன்னு நினைக்கறீங்களா? இந்த வீட்டாருக்கு விதிமுறைகள மதிக்கும் தன்மை இல்லை என்பது எனக்கு இப்போ தெளிவா தெரியுது. நான் ரொம்ப ரொம்ப டிஸ் அப்பாயிண்ட் ஆகிட்டேன்” என பிக்பாஸ் கடுமையாகப் பேசியுள்ளார்.
மாயா - பூர்ணிமா சண்டை
மேலும் கரன்சியைப் பிரிக்கும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக உற்ற தோழிகளான மாயா - பூர்ணிமா இடையிலும் சண்டை வெடித்துள்ள நிலையில், பூர்ணிமா கோபமாக பாட்டிலை தட்டிவிட்டுச் செல்லும் காட்சியும் ப்ரொமோவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று டிக்கெட் டூ ஃபினாலேவில் சலுகை வழங்குவதற்கான டாஸ்க் நடைபெற்று முடிந்த நிலையில், நேரத்தை கணிக்கும் இந்த டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தோல்வியடைந்தனர். டாஸ்க்கில் தோல்வி அடைந்தால் டைம் பாம் வெடிக்கும் என ஏற்கெனவே பிக்பாஸ் தெரிவித்திருந்த நிலையில், அவர் சொன்னபடி டைம்பாம் வெடித்தது.
தினேஷால் புலம்பிய அர்ச்சனா!
அதன்படி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வாக வழிவகை செய்யும் ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருவருக்கு பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து போட்டியாளர்கள் இடையே நடந்த டிஸ்கஷனை அடுத்து, விஜய் வர்மா, அர்ச்சனா இருவரும் தேர்வு செய்யப்பட்டு, டிக்கெட் டு ஃபினாலேவில் பங்கேற்கும் இவர்களது வாய்ப்பு பறிக்கப்பட்டது.
தினேஷ் அர்ச்சனாவுக்கு இதில் வாக்களிக்க அர்ச்சனா விசித்ராவிடம் புலம்பித் தீர்த்தார். “நான் அண்ணா அண்ணா என்று அவரிடம் பேசினேன். ஆனால் அவர் இந்த டிக்கெட்டின் வேல்யூ தெரியலனு காரணம் சொல்லி என்ன தேர்ந்தெடுக்கறாரு” என அர்ச்சனா விசித்ராவிடம் புலம்பினார்.
தப்ப முயன்ற கூல் சுரேஷ்
மற்றொருபுறம் சென்ற வாரம் கமல்ஹாசனிடம் கடும் அர்ச்சனை வாங்கிய விஷ்ணு, தான் சண்டை போட்டிருந்த மாயா, விக்ரம், பூர்ணிமாவிடம் நேற்று மீண்டும் மனம் விட்டுப் பேசினார். மேலும் விசித்ரா நாமினேஷனின்போது கூல் சுரேஷ் வீட்டில் சொல்லாமல் வந்ததாக சொல்லி நாமினேட் செய்ய, கூல் சுரேஷ் அது முதல் பெரும் அப்செட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பிக்பாஸ் வீட்டில் இருந்து கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது. தான் நிகழ்ச்சிக்கு வரும்போதே வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டதாகவும், தான் மீண்டும் வீட்டுக்கு போக விரும்புவதாகவும் தொடர்ந்து கூல் சுரேஷ் சொல்லி வரும் நிலையில் அவர் இப்படி செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க: Cool Suresh: பிக்பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்! வெளியான அதிர்ச்சி வீடியோ!