Bigg Boss Dhanalakshmi: ‛ரூ.12 ஆயிரத்திற்கு செருப்பு... துணிக்கடை...’ தனலட்சுமி பற்றி அவரின் மாஜி நண்பர்கள் பேட்டி!
அவார்ட் விழா நடத்தும் அளவிற்கு தனலட்சுமி வசதியானவர் என்று அவரின் டிக்டாக் நண்பர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டை போட்டு பேசுபொருளாக மாறிய தனலட்சுமியின் சில நண்பர்கள், அவரை பற்றிய அதிர்ச்சி தரும் விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.
பிரபல யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில், பிக்பாஸ் போட்டியாளர் தனலட்சுமியின் நண்பர்கள் சிலர், எடுத்தவுடன் தனலட்சுமி ஒரு துரோகி என்று சொல்லி அந்த பேட்டியை துவங்கினர்.
கேள்வி : தனலட்சுமி உங்களுக்கு எப்படி தெரியும்.
பதில் : இரண்டு வருடங்களுக்கு முன், டிக்டாக் மூலம் நாங்கள் நண்பர்கள் ஆனோம். முதலில், தனலட்சுமிதான் எனக்கு மெசேஜ் செய்தார். எனது பர்த்டே பார்ட்டியில் சந்தித்தோம். அவரும் அவரின் அம்மாவும் வந்தார்கள். அப்போது தனலட்சுமி டிக்டாக்கில் பேமஸ் கிடையாது. என்னுடன் டூயட் செய்த பிறகுதான் அவர் பிரபலமானார். பின்னர், ஒரு அவார்ட் விழாவிற்கு என்னை சப்போர்ட் செய்ய சொன்னார்.
கேள்வி : என்ன அவார்ட் அது? யார் நடத்திய அவார்ட் அது?
பதில் : அது ஸ்பார்க்லிங் அவார்ட், அதை தனலட்சுமிதான் நடத்தினார். இது ஈரோடில் நடந்தது. முதலில், அவர்தான் இந்த விழாவை எடுத்து நடத்துகிறார் என்று எனக்கு தெரியாது. பின்னர், அவர் வீட்டுக்கு ஒருமுறை சென்று போது அவர் மொபைல் மூலம், உண்மையை தெரிந்து கொண்டேன்.
கேள்வி : அவார்ட் விழா நடத்தும் அளவிற்கு அவ்வளவு வசதியா ?
பதில் : ஆமாம். அவரின் அம்மா துணிக்கடை ஒன்று வைத்துள்ளார்கள். பின், ஃபைனான்ஸ் செய்யும் தொழிலையும் செய்து வருகிறார். அவருக்கு அப்பாவும் உள்ளார். அவர் ஒரு மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
கேள்வி : பிக்பாஸ் நிகழ்ச்சியில், தனலட்சுமி ஏழ்மை பட்டவர் என்றும் தனக்கு தந்தை இல்லை என்றும் சொன்னாரே?
பதில் : இல்லை, அவரின் பழை டிக்டாக் வீடியோவில் அவரின் அப்பா இருப்பார். தனலட்சுமிக்கு வசதிதான். 12,000 ரூபாய் கொடுத்துதான் செருப்பு வாங்குவார்.
கேள்வி : அவார்ட் என்ன ஆனது, உங்களுக்கு அவார்ட் கிடைத்ததா?
பதில் : இல்லை எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் தனலட்சுமிக்கு கிடைத்தது. அவர் ஒரு அவார்ட் விழா நடத்தி அவரே தனக்கு விருது வழங்கி கொண்டார்.
கேள்வி : பின்னர் என்ன ஆனது ?
பதில் : அவார்ட் விழா மூலம் அவருக்கு கெட்ட பெயர் உண்டானது. அவரின் டிக்டாக் பக்கத்தின் பெயர் “சுகி”. அந்த பக்கம் டெலிட் ஆக, 10 15 பக்கத்தை ஒன்றின் பின் ஒன்றாக உருவாக்கி டிக்டாக் செய்து கொண்டிருந்தார்.
கேள்வி : பிக்பாஸ் வீட்டில் ஏன் இவ்வளவு கோவமாக இருக்கிறார். சிரிக்கவே மாட்டாரா?
பதில் : நாங்கள், தனலட்சுமி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று தெரிந்த உடன் அந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்பதை நிறுத்திவிட்டோம். அவர் மற்றவர்களிடம் எரிந்து எரிந்து விழுவார். மற்றவர்களிடம் குறை காண்பார். அவர் மீதுள்ள தவரை உணரமாட்டார். தலைகணம் பிடித்தவர்.
கேள்வி : அப்போ எப்படி அவருடன் நட்பு பாராட்டினீர்கள் ?
பதில் : வேலை ஆகும் வரை எங்களை நன்றாக பயன்படுத்தி கொண்டார். அப்போது சூப்பராக பேசுவார்.
கேள்வி : அமுதவாணன் பேய் வேஷம் போட்டதற்கு பயந்தார். அவர் பேய் போன்ற விஷயத்திற்கு பயப்படுவாரா?
பதில் : இல்லை, இரவு 1:30 மணிக்கு வேகமாக வண்டி ஓட்டி செல்பவர் அவர். அது எல்லாம் நடிப்பு . அவர் பயப்படும் கேரக்டர் இல்லை.
கேள்வி : என்ன வேலை செய்கிறார் அவர்?
பதில் : பத்தாவதுதான் படித்துள்ளார். முழுநேரமாக டிக்டாக்தான் செய்து வருகிறார். அவர் மீது ஒரு குறை சொல்லக்கூடாது. போலீஸ் வைத்து மிரட்டினார்கள். என் செல்போன் நம்பரை, டிக்டாக்கில் வெளியிட்டனர்.
கேள்வி : என்ன ஆச்சு ?
பதில் : அசிங்கமாக வெளியிட்டனர். இது வேண்டும் என்றால், இந்த பெண்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று டிக்டாக்கில் வெளியிட்டனர்.
கேள்வி : இவர் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.
பதில் : பணம்தான். அவருக்கு அனைத்து இடத்திலும் ஆட்கள் உண்டு.