மேலும் அறிய
Bigg Boss 7 Tamil: அடுத்த சம்பவத்துக்கு ரெடியா? - பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மாயா - அர்ச்சனா மோதல்..!
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டால் மீண்டும் மாயாவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் 7 தமிழ்
Bigg Boss 7 Tamil: விக்ரம் மீது வெறுப்பாக ஏன் நடந்துக்க வேண்டும் என மாயாவை பார்த்து அர்ச்சனா கேட்க, அதற்கு நீங்க நினைப்பது போல் நான் இருக்க முடியாது என மாயா காட்டமாக பதிலளிக்கும் புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிரது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணியில் இருந்து 10.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 9.30 மணியில் இருந்து 11 மணி வரையிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுமட்டுமில்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்டு கார்டு என்ட்ரியாக 5 பேரும் என மொத்தமாக 23 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான வாரத்தின் இறுதிநாள் எபிசோடில் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து விசித்ரா, மாயா, பூர்ணிமா, விஷ்ணு விஜய், விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், நிக்சன், மணி சந்திரா, ரவீனா, விஜய் வர்மா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், ” விக்ரம் வெளியே போகும் போது நீங்க ஹேட்ரெட் காட்றீங்க. ஏன் அவர் மேல இருக்கற பாசத்தை காட்டல...” என அர்ச்சனா கேட்கிறார். அதற்கு பதிலளித்த மாயா, ” எனக்கு 10 வாரம் தெரியும். நீங்க அடிக்கும்போது நான் அவனை தூக்கி விட்டு இருக்கேன். அது மனிதாபிமானம் இல்லை, நான் ஹேட்ரெட் ஆக இருக்கிறேன் என்று சொல்வது எனக்கு சொத்தமாக பிடிக்கவில்லை. நீங்க எதிர்பார்க்கறபோல நான் நடந்துக் கொள்ள முடியாது” என காட்டமா பதிலளித்துள்ளார். இதனால், பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரமால் மீண்டும் மாயாவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
View this post on Instagram
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ”பிக்பாஸ் வீட்டில் சிக்கிய 6 பேர்” - இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் இவர்கள் தான்..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion