Bigg Boss Poornima: அட.. நயன்தாரா கூட நடிச்ச கையோட ‘பிக்பாஸ்’ வீட்டுக்கு வந்த பூர்ணிமா.. வைரலாகும் போஸ்டர்!
சென்ற சீசனில் பங்கேற்ற ஜனனி சமீபத்தில் வெளியான லியோ படத்தில் நடித்து கவனமீர்த்தது போல, பூர்ணிமாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் இப்படத்தின் மூலம் கவனமீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் 7ஆவது சீசனில் தற்போது பங்கேற்று வரும் பூர்ணிமா நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தில் நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 44ஆவது நாளில் அடி எடுத்து வைத்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் பிக்பாஸ் வீட்டில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், கடந்த வார சண்டை, சச்சரவுகள் மறந்து இனிப்பு செய்து, பட்டாசு வெடித்து போட்டியாளர்கள் நிம்மதியாக தீபாவளி கொண்டாடினர்.
சென்ற வார இறுதி எபிசோடுகளில் விசித்ரா - அர்ச்சனா - தினேஷ் கூட்டணிக்கு வந்த ஆடியன்ஸின் அப்ளாஸ், கமலின் நடுநிலையான கமெண்ட்ஸ் ஆகியவை மாயா - பூர்ணிமா கூட்டணியை அப்செட்டாக்கியதால் இருவரும் பிக்பாஸ் வீட்டில் கடுகடுவென்றே வலம் வருகின்றனர்.
அதன்படி, இந்த வாரம் தினேஷ் கேப்டன் பதவி வகிக்கும் சூழலில், ஏற்கெனவே தங்கள் ஒத்துழையாமை வேலையை மாயா - பூர்ணிமா இருவரும் தொடங்கி, ஆங்காங்கே அவரை கோபப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மாயா - பூர்ணிமா இருவரும் ப்ரோமோவில் இடம்பெறுவது, கண்டெண்ட் கொடுப்பது என வலம் வரும் நிலையில், இவர்கள் இருவரும் இணையத்தில் லைம்லைட்டிலேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் 75ஆவது படமான அன்னபூரணி படத்தில் பூர்ணிமா முக்கிய வேடத்தில் நடிக்கும் தகவல் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடும் நயன்தாராவின் 75ஆவது படமான ‘அன்னபூரணி’ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி உள்ளது. இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தினை இயக்கியுள்ள நிலையில், ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி கவனமீர்த்தது. இந்நிலையில், ஏற்கெனவே யூட்யூப் பிரபலமாகவும் வளர்ந்து வரும் நடிகையாகவும் உள்ள பிக்பாஸ் பூர்ணிமா, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக படக்குழு பகிர்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வரும் டிச.1ஆம் தேதி அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் செல்வதற்கு முன்பாகவே பூர்ணிமா நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், சென்ற சீசனில் பங்கேற்ற ஜனனி சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தில் நடித்து கவனமீர்த்தது போல, பூர்ணிமாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி பின் இப்படத்தின் மூலம் கவனமீர்ப்பார் என ரசிகர்கள் ஆரூடம் தெரிவித்து வருகிறார்கள்.