Watch Video | புத்தாடை.. புன்சிரிப்பு.. பிக்பாஸில் இருந்து வெளியேறிய நமீதாவின் லேட்டஸ்ட் வீடியோ..!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்
பிக்பாஸ் நமீதா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தன்னுடைய சோஷியல் மீடியாவில் முதல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாலையோரம் உள்ள சிறுவர்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்கிறார். கைக்குழந்தை ஒன்றுக்கும், சிறுவர்களுக்கும் புத்தாடை கொடுத்து அழகு பார்த்துள்ளார் நமீதா. நமீதாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவரது வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள பலரும், உங்களுக்கு என்றுமே ஆதரவு உண்டு என்றும், நீங்கள் ஏன் பிக் பாஸில் இருந்து வெளியே வந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக,பிக் பாஸ் நிகழ்ச்சியின் 'கதை சொல்லட்டுமா?' பகுதியில் நமீதா தன் கதையைச் சொன்னபோது, “உடலில் மாற்றம் ஏற்பட்டு கேலிக் கிண்டலுக்கு ஆளானது முதல், உடலில் விழும் அடிகள் தொடர்ச்சியான பழக்கமாகி மறுத்துப்போனது வரை, அவர் கோர்வையாய் பேசியவை எல்லோரையும் அசைத்து, அழவைத்தது. பயம், பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லைகள் என தான் கடந்து வந்த அனைத்தையும், நம் கண்முன்பு நிறுத்தினார் நமீதா.
மனநல காப்பகத்தில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லிய நமீதா, காப்பகத்தில் தன்னுடன் இருந்தவர்களை மனநல பாதிப்படைந்தோர் என்கிறார். மெண்டல் அல்ல தெரியாமல் உதிர்த்த வார்த்தையைத் திருத்தி, அவர்களுக்கு மனதில் ஏதோ பிரச்சனை, அவ்வளவே” என்றார். நமீதாவின் பேச்சுக்கு சோஷியல் மீடியாவில் ஆதரவு பெருகின. அவருக்கு ரசிகர்களும் அதிகரித்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியானது. ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நமீதா வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவியது.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நமீதா, பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவக் காரணங்களுக்காக அவர் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியில் வந்ததாக வெளியான தகவலும், பிக்பாஸ் ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென்று ஷோவில் இருந்தும் அவர் காணாமல் போனார். ஏன் திடீரென நமீதா வெளியேறிவிட்டார் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
JaiBhim | ’கையில எடு பவர... ! துணிஞ்சு எடு பவர...!’ - வைரலாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பாடல் !
மூன்றாம் பாலினத்தவரான நமீதா, தன் உடல் சார்ந்த சில மருத்துவ சிகிச்சையை எடுத்துகொண்டதாகவும், அதில் சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதால் அவர் அவசரமாக வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மீண்டும் அது தொடர்பான சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram