மேலும் அறிய

JaiBhim | ’கையில எடு பவர... ! துணிஞ்சு எடு பவர...!’ - வைரலாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பாடல் !

“திருடன் இல்லாத ஜாதி இருக்கா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க” என வலிமையான வசனங்கள் டீசரில் வெளியான நிலையில் தற்போது பாடல் வெளியாகியுள்ளது.

தா.சே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் அவரது 39வது திரைப்படம் ஜெய் பீம் . இந்த படத்தை சூர்யாவின் 2D Entertainment தயாரித்து வருகிறது. சமூக அரசியல் பேசும் படமாக ஜெய் பீம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தின் பாடல் ஒன்றில் கிளிம்ஸை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  “கையில எடு பவர , துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இல்லை அத தவர “ என தொடங்கும் அந்த வரிக்காணொளி பாடலை தெருக்குரல் அறிவு பாடியுள்ளார். முழுமையான பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜெய் பீம்  படத்தில் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிடுவதாக சூர்யா நடித்திருக்கிறார். ”பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு அநீதியைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்” “திருடன் இல்லாத ஜாதி இருக்கா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க” என வலிமையான வசனங்கள் டீசரில் வெளியாகியிருந்த நிலையில் நடிகர் சூர்யாவும் “உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும்... மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வு பூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய் பீம்!!” என தெரிவித்திருந்தார்.

சமூகம் சார்ந்த கருத்துகளை துணிச்சலாக பேசுபவர் நடிகர் சூர்யா. சமூக அக்கறையுடன் கூடிய பதிவை அவ்வபோது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அந்த வகையில் தற்போது கையில் எடுத்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் மூலமாக சமுதாயத்தின் பல பிரச்சனைகளை வெளிப்படையாக பேசியிருப்பார் என நம்பப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget