Asal Kolar: ‛பிறந்ததில் இருந்து நான் அப்படி தான்... யாரையும் தவறாக தொடவில்லை’ அசல் கோலாரின் வீடியோ பேட்டி!
Asal Kolar: மீம்ஸ்யில் வருவது மாதிரி என் செயல்பாடு இருந்திருந்தால், வீட்டில் இருப்பவர்கள் சும்மா விடுவார்களா? நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அது கேமராவில் வந்திருக்காதா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அசல் கோலார், பிக்பாஸ் தொடர்பான மீம்ஸ்களில் முதல் இடத்தில் உள்ளார். பெண்களை சீண்டியது தான் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதனால் தான் அவருக்கு எதிரான ஓட்டுகளும் விழுந்தன. இந்நிலையில், வெளியே வந்த அசல், முதன்முறையாக ஹாட்ஸ்டார் மூலம் மனம் திறந்து பேசியுள்ளார். இதோ அதில் அவர் பேசியவை...
‛‛அனைவருக்கும் வணக்கம், பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்துவிட்டேன். வந்து பார்த்தேன். அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் என்னிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கும் என எனக்கு தெரியும். அதற்கு கடைசியாக பதில் சொல்கிறேன் மற்ற கேள்விகளை கேளுங்கள். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்த பின், எதற்கு என காரணம் தெரியாமல் இருந்தது. வெளியே வந்து பார்க்கும் போது தான், இது தான் பிரச்னை என தெரிய வந்தது. அதை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கொஞ்சமல்ல, ரொம்பவே கஷ்டமாக இருந்தது.
இன்டர்நெட் அப்படி தான் இருக்கும். நாம அதுக்கு ஏத்த மாறிதான் போக வேண்டும். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் சோகமாக இருந்தது. தெரியாமல் செய்த ஒன்றை இந்த அளவிற்கு கொண்டு சென்றது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டில் மணி எனது பேவரிட், அசீம், தனலட்சுமி, ஷிவின், நிவாஷினி ஆகியோரை எனக்கு பிடிக்கும். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரை பற்றி சொல்ல வேண்டுமானால், ‛தனலட்சுமி: நேரடியாக அடிக்கணும்னு நெனக்கிறாங்க. அவங்களோட பாய்ண்ட்டை நேரடியா அடிக்கிறாங்க. நிவா வந்து, இன்னும் கொஞ்சம் எல்லாருடனும் பேசி பழக வேண்டும். அவங்களை மாதிரி வைஃப் பண்றவங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அனைவருடனும் அவர் பழக வேண்டும். குயின்சி, எல்லாரையும் கையாளுவதில் சிறந்தவராக இருக்கிறார். அவருடைய கேரக்டரும் கேடாமல், மற்றவரையும் நோகடிக்காமல் இருப்பது அவருக்கு தெரிகிறது. கதிர், அவருடைய கேரக்டரா என்னனு தெரியல. மற்றவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாக தெரிகிறது. விக்ரமன், அவர் நினைப்பதை பண்றாரு. அவரை பத்தி நான் நிறையா சொல்லக்கூடாது.
ஜனனி, ஸ்மார்ட், திறமைசாலி. அவங்களை பற்றி முதலில் தெரியவில்லை. வெளியே வந்து தான் அவரை பற்றி தெரிகிறது. அவர் வேறு வேலை செய்கிறார். நல்ல விளையாடுகிறார். ஆயிஷா, எமோஷனலா? இல்ல அதுக்கு இடம் தருகிறாரா? இல்லை அப்படி நடிக்கிறாங்களா என தோன்றுகிறது. அவங்க கரெக்டா பேசிட்டு இருக்காங்க. அசீம், நேருக்கு நேர் அடிக்கும் இடத்தில் இருக்கிறார். திங்கள், செவ்வாய், புதன் அமைதியா இருக்காரு. மற்ற நாளில் அடித்து பறக்க விடுகிறார்.
View this post on Instagram
ஷிவின், எல்லாத்தையும் சரியாக புரிந்து தெளிவாக பேசுறாங்க. நான் அவரிடம் அதிகம் கனெக்ட் ஆக முடியவில்லை. ஏடிகே, நான் உள்ளே இருந்த வரை என்னிடம் நன்றாக தான் பேசி பழகினார். ஜி.பி.முத்து, அவர் உள்ளே இருந்த நாட்கள் ஜாலியா இருந்தது. அவர் போன பிறகு மேஜரா ஒரு விசயத்தை மிஸ் பண்ணோம். அங்கே இருந்திருந்தால் இன்னும் ஜாலியா இருந்திருக்கலாம்.
பிக்பாஸ் வீட்டில் யார் வெற்றி பெறுவார் என்பதை நான் கூற முடியாது. மக்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும். இன்னும் அந்த வீட்டில் இருக்க வேண்டிய நாட்கள் நிறைய உள்ளது. அதில் விளையாட்டு நிறைய மாறலாம். நான் எலிமினேட் ஆகவில்லை என்றால், அந்த வாரத்தில் அசீம் அல்லது மகேஸ்வரி தான் எலிமினேட் ஆகியிருப்பார்கள். அசீம் பேசுவது இதயத்தை உடைக்கும் படியாக உள்ளது. அதனால், அவரை பலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் வெளியே வந்திருக்கலாம்.
என்னுடைய புதிய சாங்க் வெளியாகியிருக்கிறது. பசங்க சேர்ந்தால் என்ன மாதிரி ஜாலியா இருப்போம் என்பது மாதிரியான பாடல் அது. எல்லோரும் அதை பாருங்க. மக்கள் எதை பார்க்கிறார்களோ அதை தான் அவர்கள் முடிவு செய்கிறார்கள். நான் பெண்களிடம் தவறாக நடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அதை தான் பார்த்தார்கள்; பார்த்ததை தான் உண்மையென அவர்கள் நம்புவார்கள். நான் எல்லோரிடமும் இருப்பது போல தான் இருந்தேன். என் சொந்தகாரர்களிடம் இருப்பதை போல தான் அங்கும் இருந்தேன்.
மீம்ஸ்யில் வருவது மாதிரி என் செயல்பாடு இருந்திருந்தால், வீட்டில் இருப்பவர்கள் சும்மா விடுவார்களா? நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அது கேமராவில் வந்திருக்காதா? அத்தனை கேமராக்கள் முன்னாடி, நான் அப்படி ஒரு எண்ணத்தில் ஒரு பெண்ணை தொடுவேனா? கஷ்டமா இருக்கு. நான் தெரிந்து செய்யாத ஒன்னு, அது ஒரு தப்புன்னு.. அது தப்பு தான், பார்த்தவர்களுக்கு அது கஷ்டமாக இருந்திருந்தால் நான் மன்னிப்புகேட்டுக்கிறேன். பிறந்ததில் இருந்து அது என்னோட கேரக்டர்; அது பொதுவில் பார்ப்பவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை நான் மாற்றிக்கொள்கிறேன்’’