Bigg Boss Tamil 9: கண்ணீர் விட்ட பார்வதி.. திவாகர் கொடுத்த ரியாக்ஷன்! அப்படி என்ன நடந்தது?
விஜே பார்வதி அழுதுகொண்டே தனது விரக்தியை வெளிப்படுத்திய போது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கூலாக மைசூர் பாக்கு சாப்பிட்டுக்கொண்டே ஆறுதல் கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil 9: விஜே பார்வதி அழுதுகொண்டே தனது விரக்தியை வெளிப்படுத்திய போது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கூலாக மைசூர் பாக்கு சாப்பிட்டுக்கொண்டே ஆறுதல் கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸின் முதல் வாரம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடலிங் துறையைச் சேர்ந்த அரோரா சின்கிளேர், ராப் பாடகர் FJ , வி.ஜே பார்வதி , கொரியன் பாய் துஷார், குக் வித் கோமாளி கனி, வேலைக்காரன் சீரியல் நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, குக் வித் கோமாளி கெமி, பிகில் பட நடிகை ஆதிரை, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத்,விமானப் பணிப் பெண் வியானா, சின்ன மருமகள் சீரியல் நடிகர் பிரவீன், மீனவ பெண் சுபி,திருநங்கை அப்சரா, ஸ்டாண்ட் அப் காமெடியனான விக்ரம், மகாநதி சீரியல் நடிகர் கம்ரூதின், அகோரி கலையரசன் என மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்கள்.
இதில் நந்தினி மற்றும் பிரவீன் காந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். குறிப்பாக நந்தினி தவிர்க்க முடியாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.
கண்ணீர் விட்ட பார்வதி.. திவாகர் கொடுத்த ரியாக்ஷன்:
இந்த நிலையில் தான் “நான் நடிக்கறனா.. என்னைப் போய் அப்படி சொல்லிட்டாங்க.. இந்த கனி எழுந்திருக்கும் போதெல்லாம் கிளாப்ஸ் வருது. என்னைத் திட்டினா வெளியே ஆடியன்ஸ் குஷியாகி கைத்தட்றாங்க.. என்ன கொடுமை இது.. உண்மையா இருக்கறதுக்கு கிடைச்ச தண்டனை இது. இதுக்குத்தான் இந்த ஷோவுக்கு வரக்கூடாதுன்னு நெனச்சேன்..
என் நிலைமை இப்படியாகிப் போச்சே”என்று விஜே பார்வதி அழுது கொண்டோ சொன்னர். அப்போது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்,”இதெல்லாம் ஒரு பிரச்னையா.. அப்படித்தான் சொல்லுவாங்க வெட்டிப் பயலுக.. நீ நீயா இரு… இந்த மைசூர்பாக்கு சாப்பிட்டுப் பாரேன்..
Alunthalum saapaduuu mukiyam😭 #BiggBossTamil9 pic.twitter.com/nAeO8YrndV
— NARESH (@naresh__off_) October 11, 2025
ரொம்ப ருசியா இருக்கு. மொத்தமே 50 ஆடியன்ஸ்தான் வந்துருக்காங்க பாரு”என்று கூறினார். இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நகைச்சுவை மீம் வீடியோவாக வைரலாகி வருகிறது.





















