Cool Suresh: “என்னோட வேட்டியை கொடுங்க பிக்பாஸ்” .. கேமராவிடம் கெஞ்சிய கூல் சுரேஷ்.. வீடியோ இதோ..!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் செய்யும் அலப்பறைகள் தான் இணையத்தில் வீடியோக்களாக ட்ரெண்டாகி வருகின்றன.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் செய்யும் அலப்பறைகள் தான் இணையத்தில் வீடியோக்களாக ட்ரெண்டாகி வருகின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியானது வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து 7வது ஆண்டாக இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியான நிலையில் நடப்பு சீசனில் அதிக இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி, “கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா” ஆகிய 18 பேரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகர் கூல் சுரேஷ்.
#CoolSuresh Funny Warning To Bigg Boss #BiggBossTamil7 #BiggBossTamil 😂😂😂 pic.twitter.com/LHhgh3pCzC
— 𝟕 ✭ (@sevensuns) October 2, 2023
தனது அலப்பறையான பேச்சுக்கள் மற்றும் சர்ச்சையான செயல்களால் சினிமாவுலகிலும், ரசிகர்களிடத்திலும் பிரபலமான கூல் சுரேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது யாரும் எதிர்பாராத ஒன்று. உள்ளே போகும்போது கமல்ஹாசன் முன் கண் கலங்கி பேசிய நிலையில், வீட்டுக்குள் சென்ற பின் வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அலப்பறையான பேச்சுகளால் ட்ரெண்டாகி வருகிறார். “பிக்பாஸ் சீசன் 7.. உள்ளே போறது ஏழரை”, “வெந்து தணிந்தது காடு..துணியை தூக்கி உள்ளே போடு” என சம்பவம் செய்யும் கூல் சுரேஷ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ட்ரெண்டானது.
அவர் உடற்பயிற்சியைப் பார்த்து துணி காயப்போட வந்த மாயா, நேரடியாக உள்ளே சென்று சக போட்டியாளர்களிடம், “கருவினில் இருக்கும் குழந்தை எக்ஸர்சைஸ் செய்வது போல இருக்கிறது கூல் சுரேஷ் செய்கிறார்” என கிண்டலாக கூறினார். இதேபோல் தனக்கு வேஷ்டி வரவில்லை என கூறி கேமராவிடம் சென்று, “ தூங்குனா மட்டும் தப்பா தெரியுதா.. நான் எல்லா கேமராவிலும் சட்டையை காட்டிட்டு வந்தேனே அப்ப தெரியலையா.. இதெல்லாம் ரொம்ப தப்பு” என காமெடியாக கண்டிக்கிறார்.
#CoolSuresh doing exercise 🤣🤣🤣#BiggBosstamil7 #BiggBossTamil pic.twitter.com/L1UCcKBzsb
— 𝙋𝙧𝙖𝙫𝙚𝙚𝙣 (@Praveen_tweeps) October 2, 2023
கிச்சன் ஏரியாவில் சென்று, “ஒரு கிளாஸில் பூக்களை காட்டினார். இது என்ன எல்லோரிடமும் கேட்கிறார். உடனே ஃப்ளவர் என சொல்கிறார். அதனை கீழே கொட்டி விட்டு இப்ப காலி ஃப்ளவர் என மொக்கை ஜோக் அடிக்க, அவரை ரவுண்டு கட்டிய சக போட்டியாளர்கள் இனிமேல் நீ ஜோக் சொல்லக் கூடாது என்கிற ரீதியில் கேள்வி எழுப்பினார்கள். இப்படியான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் வெடித்த ஆடை சர்ச்சை.. விசித்ராவுக்கு கட்டம் கட்டிய பெண் போட்டியாளர்கள்..!